தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
99
படாமல் புள்ளியுள்ள வெள்ளையான முதுகோடு ஓடியது. அதைக் கண்ட செவ்விய சால் அடித்து உழும் உழவர் தம் கைக் கோலால் அடித்தனர். அந்த அடிக்கும் அஞ்சாது ஒதுங்கி அவ் வாளை மீன் பசிய கால்வாயுள்ள வயல் வரப்பின் பக்கத்தில் பிழைத்துப் புரண்டது. அதுவே வாணன் என்பவனின் சிறுகுடி என்னும் ஊர்” என்று தன்னை மறந்து பரத்தையரிடம் இருந்து திரும்பிய தலைவனிடம் தலைவி வெறுத்துக் கூறினாள்.
177. அவளுடனே இனிது வாழ்க வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ பழனப் பல் புள் இரிய, கழனி வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும் தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என் தொல் கவின் தொலையினும் தொலைக சார விடேஎன் விடுக்குவென் ஆயின், கடைஇக் கவவுக் கை தாங்கும் மதுகைய, குவவு முலை சாடிய சாந்தினை வாடிய கோதையை, ஆசுஇல் கலம் தழிஇயற்று; வாரல், வாழிய, கவைஇநின்றோளே! - பரணர் நற் 350 “வெண்ணிற நெற்கதிரை அறுப்பவர் தண்ணுமை என்னும் வாச்சியத்தை முழக்குவர். அதுகேட்டு வயலிலுள்ள பறவைகள் எல்லாம் அஞ்சி, மருதமரக் கிளைகளில் போய் உட்காரும். வயலை நோக்கித் தாழ்ந்து வளைந்த கிளைகளை யுடைய அம் மரத்தின் தொங்கும் பூங்கொத்துகள் உதிரும். அப்படி வளப்பமுள்ளது இருப்பையூர். அது இரவலர்க்குத் தேர் வழங்கும் கொடை வள்ளலான விராஅன் என்ப வனுக்குச் உரிமையானது. அந்த ஊர் போன்ற என் இயற்கை அழகு கெடுவதாயினும் கெடுக தலைவ, உன்னை என் அருகில் நெருங்க விடமாட்டேன். விட்டாலும் என் கைகள் உன்னைப் புறத்தே செலுத்தித் தடுக்கும் வலிமை யுடையனவாகும். நீயோ பரத்தையரின் திரண்ட கொங்கைகளால் சாடப்பட்ட சந்தனத்தை உடையாய். வாடிய மாலையையுடையாய். உன்னைத் தீண்டுவது விட்டெறிந்த கலங்களைத் தீண்டுவது