100
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
போலாகும். ஆதலால் நீ இங்கே வர வேண்டா. நீயும் உன்னைத் தழுவிய பரத்தையும் நெடுங்காலம் வாழ்வீர் களாக” என்று தலைவனிடம் வெறுத்துரைத்து எள்ளினாள்.
178, நீடு வாழ்க!
முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய விழவு ஒழி களத்த பாவை போல நெருநைப் புணர்ந்தோர் புதுநலம் வெளவி, இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர், சென்றி - பெரும, - சிறக்க, நின் பரத்தை பல்லோர் பழித்தல் நாணி, வல்லே காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப, கையிடை வைத்து மெய்யிடைத் திமிரும் முனியுடைக் கவளம் போல, நனி பெரிது உற்ற நின் விழுமம் உவப்பேன் மற்றும் கூடும், மனை மடி துயிலே. - ஒரம்போகியார் நற் 360 “பெரும வருந்திய பாகர் விரைவாகப் பரிக்கோலால் குத்தி அலைத்தபோது சினங் கொண்ட யானை, கையிடையே வைத்திருந்த கவளத்தை உடம்பில் தடவிக் கொள்ளும். அதுபோலப் பலரும் உன்னைப் பழித்தலால் நீ நாணி மிகப் பெரிதுற்ற உன் துன்பத்தோடு வந்தாய். உன் வருகை கண்டு நான் உவப்பேன் எனினும் நீ இங்கு வந்து மனையில் சோம்ப லாக உறங்கும் துயில் மற்றொரு நாளும் கூடும். ஆதலால் மத்தளம் ஒலிக்க, முறையாகக் கூத்து நிகழ்ந்து விழா முடிந்த களத்திலுள்ள பாவை போன்ற அழகுள்ள பரத்தையை நேற்றுப் புணர்ந்து அவள் புதுநலம் நுகர்ந்து, இன்று பாணன் தரும் புதுப் பரத்தையின் மெல்லிய தோளைப் பெறச் செல்வாயாக. உன் பரத்தமை சிறக்க” என்ற பரத்தையைப் பிரிந்து தலைவியின் ஊடலைத் தீர்க்க வந்தவனிடம் தோழி சினம் வெளிப்படக் கூறினாள்.
179. விழிகளை மூடிச் சிரித்தாள்
வாராய், பாண நகுகம் - நேரிழை கடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி