பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


‘வாழையின் மெல்லிய இலைகள் ஒழுங்காக அசையும் படியான நெல்விளையும் வயலில் செவ்விய பரந்த இடத் தில் கதிர்அறுப்பவர் இட்ட சூட்டின் பக்கத்தில் பெரிய கரிய கழுத்தையுடைய வாளை மீன் துள்ளும்படியான ஊரனே, உன்னையன்றி யான் இங்கு இருப்பேனாயின். இங்கு இனிமையற்ற நிலையோடு என்ன பிழைப்பு எனக்கு உண்டு. ஒன்றுமில்லை. வீரமிக்க சோழரது உறையூரின் அவையில் நிலைபெற்றிருக்கும் அறம் அங்கிருந்து செல்ல அறியாதது போல, சிறந்த நட்போடு கலந்து என் நெஞ்சத்தி ருந்த நீயும் நீங்கிச் செல்ல அறியாது உள்ளாய். எனவே என்னோடு இருந்து விடுக” என்றாள் காதற் பரத்தை