பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


“மணிகள் உள்ளே இடப்பட்ட சிலம்பையும் ஆம்பல் மலரால் தொடுக்கப்பட்ட மாலையையும் அரத்தால் இயற்றப் பெற்ற அழகிய வளையலுடன் பொலிவுடைய முன் கை களையும், இழைகள் அணிந்த பருத்த தோள்களையுமுடைய ஐயை என்பவளின் தந்தை சிறந்த வள்ளன்மை உடைய தித்தன். அம் மன்னனுக்குரிய மழை வளத்தால் உண்டான குவியலான நெல்லை உடைய உறையூரில், ஒடக் கோல் நிலை பெறாத காவிரியாற்று வெள்ளத்தில் நேற்று நீ விரும்பிய, மாட்சிமை யுடைய காதணியையும், ஒள்ளிய பிற அணி களையும் உடைய பரத்தையுடனே, வேழக் கரும்பினால் ஆன வெண்மையான தெப்பத்தைக் கொண்டு, பூழி நாட்டா ரின் நீர் நிலையில் பெண் யானையுடன் சென்று நீராடும் ஆண் யானை போல் முகம் மலர்ந்து அங்கு நின் உயர்ந்த மார்பில் அணிந்த பூமாலை குழைய நீராடினாய். அத்தகைய நீ இன்று இங்கே வந்து ‘மார்பில் உள்ள அழகிய கொங்கை யில் தோன்றிய தேமலையும் குற்றமில்லாத கற்பையும் உடைய, என் மைந்தனின் தாயே என்று வஞ்சனையுடைய பொய்யான சொற்களை வணங்கிப் பலகாலும் கூறி என் முதுமையை இகழாதே அம் முதுமைக்கு யாம் பொருத்த மாவோம். அது பற்றி நாணம் கொள்ளோம். தீயைப் போன்ற தாமரைப் பூக்களையுடைய வயலில் அழகிய உள் துளை களைக் கொண்ட வள்ளையின் மிெல்லிய கொடிகளை உழக்கி வாளை மீன்களைத் தின்ற கூரிய பற்களையுடைய நீர் நாய், முள்கள் பொருந்திய தண்டை உடைய பிரம்பின் பழைய புதர்களில் தங்கியிருக்கும் இடங் களைப் பெற்ற பல வேற் படைகளையும் ‘மத்தி என்பவனின் கழாஅர் என்ற ஊரைப் போன்ற எம் இளமை கழிந்து பழையதாயிற்று. ஆதலால் உன் மாயப் பொய்ம் மொழி எங்கட்கு இனிமை செய்வது எவ்வாறு?” என்று பரத்தை யிடமிருந்து வந்த தலைவனிடம் தலைவி கூறினாள்.

184 மகனுக்குத் தாயாதல் பொருந்தும்

நாயுடைய முது நீர்க் கலித்த தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,