பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

107


மாசு இல் அங்கை, மணி மருள் அவ் வாய், நாவொடு நவிலா நகைபடு தீம் சொல், யாவரும் விழையும் பொலந்தொடிப்புதல்வனை, தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே, கூர் எயிற்று அரிவை குறுகினள், யாவரும் காணுநர் இன்மையின், செத்தனள் பேணி, பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை, ‘வருகமாள, என் உயிர் எனப் பெரிது உவந்து, கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன், மாசு இல் குறுமகள் எவன் பேதுற்றனை? நீயும் தாயை இவற்கு? என, யான் தற் கரைய, வந்து விரைவனென் கவைஇ - களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா, நாணி நின்றோள் நிலை கண்டு, யானும் பேணினென் அல்லெனொ - மகிழ்ந - வானத்து அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின் மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே?

- சாகலாசனார் அக 16 “தலைவனே, நீர் நாய்கள் பொருந்திய பழைய நீரில் தழைத்த தாமரை மலரின் பொகுட்டைச் சூழ்ந்துள்ள உள்ளிதழ் களை அடுத்துள்ள மெல்லிய இதழைப் போன்ற குற்றம் இல்லாத உள்ளங்கையையும், பவளம் போன்ற சிவந்த வாயை யும், நாவால் திருத்தமாகப் பேசப்படாத கேட்பவர்க்கு நகை யைத் தோற்றுவிக்கும் இனிய சொல்லையும், காண்பவர் விரும் பும் பொன்னால் ஆன அணிகலன்களையும் அணிந்த நம் அரிய மகனை, அவன் சிறிய தேரை உருட்டி விளையாடும் தெரு வில் தனியனாய்க் கண்டு பொன்னணிகள் அணிந்த கூரிய பற்களையுடைய நின் காமக் கிழத்தி அவனை நெருங்கினாள்.

அங்குப் பார்ப்பவர் எவரும் இல்லாமையால் நினக்கும் அவனுக்கும் உள்ள உருவ ஒப்புமை கருதி அவன் தனக்கும் மகனாவான் என எண்ணி, ‘என் உயிரே வருக எனச் சொல்லி எடுத்துப் பொன்னணிகளால் சுமக்கப் பெற்ற தன் இளைய கொங்கை மீது அனைத்துக்கொண்டு நின்றாள். அவளை யான் கதவின் பின்புறம் மறைவாக நின்று கண்டேன்.