பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

109


செவிலி கை என் புதல்வனை நோக்கி ‘நல்லோர்க்கு ஒத்தனின் நீயிர் இஃதோ செல்வற்கு ஒத்தனம், யாம் என, மெல்ல என் மகன்வயின் பெயர்தந்தேனே, அது கண்டு, ‘யாமும் காதலம், அவற்கு எனச் சாஅய், சிறு புறம் கவையினனாக, உறு பெயல் தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ் செய் மண் போல் நெகிழ்ந்து, அவற் கலுழ்ந்தே நெஞ்சு அறை போகிய அறிவினேற்கே? - பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி அக 26 “நம் தலைவரிடம் ஊடல் கொண்டிருந்த நீ அவர் வந்த போது தின் ஊடல் எவ்வாறு நீங்கிற்று?’ என வினவும் தோழியே, கேட்பாயாக :

வளைவான முட்களையுடைய முள்ளிச் செடி குவிந்த குலையினின்றும் தாமே உதிர்ந்த மீனின் முள்ளைப் போன்ற வெண்மையான காம்புகளை உடைய கருமையான மலர் களை, விளையாடும் இளம் பெண்கள் தாம் கொண்டாடும் திருவிழாவை அழகு செய்தற் பொருட்டுப் பொறுக்கிச் சேர்ப்பர். இத்தகைய இடமான அழகிய வயல்கள் பொருந்திய வளம் பொருந்திய ஊரையுடைய நம் தலைவனுடன் எம்மைப் போன்றவர் ஊடல் கொண்டிருக்க முடியுமோ? தலைவருடன் ஊடாமைக்குக் காரணத்தைச் சொல்வேன் கேட்பாயாக :

நாள்தோறும், இக் கொங்கைகள், பெரிய மதிலின் கதவுகளைப் பாய்ந்து குத்திய ஆண் யானையின் கொம்பு களைப் போல் விளங்க, இவற்றின் கருமையான கண்கள் யானைக் கொம்பின் இரும்பால் செய்து கட்டப்பட்ட பூண்கள் போல் அழகுடையனவாய், யான் என் மார்பிடம் முழுவதும் அவற்றில் பொருந்தும்படி தழுவுவதலினின்று என்னை விலக்காதே, எனச் சொல்லி முயங்குவார். இக் கொங்கைகளின் அழகில் பெரிதும் மயங்கி, அவர் கூறும் பாராட்டுதலை விரும்பாமல், ‘இனி இப் புகழுரையைக் கூறாது ஒழிவீர்” என்று யான் தடுக்க, அவர் உடன்படாதவ ராய் இக் கொங்கைகளைப் பலவகையாய்ப் பாராட்டிய காலமும் உண்டு. அவையெல்லாம் முன்னம் நிகழ்ந்தவை.