தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
111
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது, கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு, நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர! வரு புனல் வையை வார் மணல் அகன் துறை, திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில் நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு வதுவை அயர்ந்தனை என்ப. அலரே, கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன் ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப, சேரல், செம்பியன் சினம் கெழு திதியன், போர் வல் யானைப் பொலம் பூண் எழினி, நார் அரி நறவின் எருமையூரன், தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல் முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல, கொன்று, களம் வேட்ட ஞான்றை வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே’
- மதுரை நக்கீரர் அக 36 பிளந்த வாயையும் பல வரிகளையும் கொண்ட பெரிய ஆண் வரால் மீன் வளைவான தூண்டிலில் தனக்குக் கால னான இரையை விழுங்கி ஆம்பல் கொடியின் மெல்லிய இலை கிழிய மேல் எழும்; குவளையின் அரும்பு மலர்ந்த பல மலர்களும் சிதையுமாறு பக்கத்தே பாயும்; பின்னர் மாறு பட்டுப் பின்னிக் கிடக்கும். வள்ளைக் கொடிகளைக் குலைத்து விடும்; அத் தூண்டிலை இட்ட, மீன் பிடிப்பவன் இழுக்கவும் இழுபடாது; மூக்கில் கயிறு கட்டி இழுக்கப் படும். சினம் கொண்ட எருதினைப் போன்று செருக்கு மிக்கு நாள் காலையில் தெளிந்த நீரைக் கலக்கும். இத்தகைய நிகழ்வுக்கு இடமான மலர்கள் பொருந்திய ஊரனே! கேட் t_Isrt IIT &
எக் காலத்தும் நீர் வற்றாது வரும் வையையாற்றின் மிக்க மணல் பொருந்திய அகன்ற துறையை அடுத்துள்ள அழகிய மருதமரம் ஓங்கிய விரிந்த மலர்களையுடைய சோலையில்