தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
115
கொண்டு அவனது எதிரே சென்றேன். சென்று, இந்த வீடு நீ புகுவதற்குரிய உங்கள் வீடு அன்று. அங்குள்ள வீடாகும்’ என்று அறிவுறுத்தினேன். என் நிலையையும் தன் நிலையையும் தன் நெஞ்சால் நினைத்துப் பார்த்து அவன் மயங்கிய மனத்துடன் கை கூப்பியபடி என்னைத் தொழுது நின்றான். அதனை இப்போது நினைத்தாலும் எனக்குச் சிரிப்பை ஏற் படுத்துகின்றது” என்று பரத்தை மனை சென்று திரும்பிய பாணனைக் கண்டு தோழியிடம் தலைவி கூறினாள்.
189. பல்லோர் பழமொழி உண்மை ‘இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப, செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப் பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே ஆகுதல் வாய்ததனம் - தோழி: நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு வதுவை அயர்தல் வேண்டி, புதுவதின் இயன்ற அணியன், இத் தெரு இறப்போன் மாண் தொழில் மாமணி கறங்க, கடை கழிந்து, காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஒடும் பூங் கண் புதல்வனை நோக்கி, நெடுந் தேர் தாங்குமதி, வலவ! என்று இழிந்தனன், தாங்காது, மணி புண்ர செவ் வாய் மார்பகம் சிவனப் புல்லி, பெரும செல் இனி, அகத்து எனக் கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், தடுத்த மாநிதிக் கிழவனும் போன்ம்’ என, மகனொடு தானே புகுதந்தோனே யான் அது படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து, இவற் கலக்கினன் போலும், இக் கொடியோன் எனச் சென்று அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப் பயிர்வன போல வந்து இசைப்பவும், தவிரான், கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய