பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


முற்காலத்தில் ஒருநாள் “ஆதிமந்தி’ என்பவள் தன் கணவனைக் காணாமல், ‘கச்சினை உடையவனும், கழலை அணிந்தவனும், தேன் ஒழுகும் மாலை அணிந்தவனும் மார்பை உடையவனும் பல்வேறு வகைத் தொழில் திறம் அமைந்த மாலையையும் சுரித்த தாடி மயிரையும் உடைய வனுமான என் கணவனான ஆட்டனத்தியை நீவீர் கண்ட துண்டோ? என்று எதிரில் வருபவரையெல்லாம் வினவினாள், ஆயினும் விடை பெறவில்லை. அதனால் பெரிதும் மயங்கி வருந்தினாள். அணையை அழித்துக் கரைகளில் பரவி நேர் கிழக்காகப் பாயும் அழகிய குளிர்ந்த காவிரிப் பேராறு ஆட்டனத்தியைக் கைக்கொண்டது போல'இப்போது யான் சூளினை மேற்கொண்டு அவனை முழுதும் கைப்பற்றிக் கொண்டிடத் துணிந்துள்ளேன். அப்போது அவன் பெண்டிர் என் செய்வார்? என்று தலைவனை நயப்பித்துக் கொண் டாள்’ எனக் கூறக் கேட்ட பரத்தை தலைவியின் பங்கிலி ருப்போர் கேட்கக் கூறினார். -

191. என் காதலி தலைகுனிந்தாள் உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால் தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி, மனை விளக்குறுத்து, மாலை தொடரி கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை; கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் கேடு இல் விழுபூ புகழ் நாள் தன்லவந்தென, உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர், பொது செய் கம்பலைமுது செம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர, புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடி, ‘கற்பினின் வழாஅ நற் பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆக எண், நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,