பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

123


தோறும் களிறான பரிசைப் பெறுபவன் பாணன். அப் பாணன் அடிக்கும் மத்தளத்தின் கண் போல், அப் பரத்தை யின் வயிற்றை அடித்துக் கொள்ளும்படி செறிந்த வளையல் ஒலித்திடக் கையை வீசிச், சிறிது பொழுது அங்கு உலாவி வருவோம், வருவாயாக, என்று பரத்தை தன் தோழியை நோக்கியுரைத்தாள்.

194. தலைவி ஊடல் தீராது

எரி அகைந்தன்ன தாமரை இடை இடை அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர் கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின் ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர! பெரிய நாண் இலைமன்ற பொரி எனப் புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல், நறுமலர்க்கு அணவரும் குறும் பல் கூந்தல், மாழை நோக்கின், காழ் இயல் வன முலை, எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை வைகுபுனல் அயர்ந்தனை என்ப; அதுவே, பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும் கையிகந்து அலர் ஆகின்றால் தானே மலர்தார் மை அணி யானை, மறப் போர்ச் செழியன் பொய்யா விழவின் கூடற் பறந்தலை உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர் ஒடுபுறம் கண்ட ஞான்றை ஆடு கொள் வியன் களத்த ஆர்ப்பினும் பெரிதே.

- பரணர் அக 116 தீயானது கொழுந்து விட்டு எரிவது போன்ற தாமரை மலர்களின் இடை இடையே செந்நெல்லை அரிந்து ஓரிடத்தே குவித்தனர் உழவர். அவர்கள் தங்களுக்குக் கள்ளை ஏறிக் கொண்டு பலகாலும் திரியும் வண்டி, சேற்றில் வந்தால் அதன் சகடங்கள் சேற்றில் ஆழ்ந்து விடாதபடி கருப்பங் கோல்களை முறித்துச் சேற்றில் பரப்புவர். அத்தகைய இயல்பு