தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
125
பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள், கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறுஉம் பயம் கெழு வைப்பிற் பல்வேல் எவ்வி நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான், பொன் இணர் நறுமலர்ப் புன்னை வெஃகி, திதியனொடு பொருத அன்னி போல விளிகுவைகொல்லோ நீயே - கிளிஎனச் சிறிய மிழற்றும் செவ் வாய்ப் பெரிய கயல் என அமர்த்த உண் கண், புயல்எனப் புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால், மின் நேர் மருங்குல், குறுமகள் பின்னிலை விடாஅ மடங்கெழு நெஞ்சே?
- நக்கீரர் அக 126 கிளியைப் போன்று இனிமையாய்ச் சில சொற்களைப் பேசும் சிவந்த வாய், கயல்மீன் போன்று ஒன்றுடன் ஒன்று போரிடுகின்ற மையுண்ட கண்கள், முகில் என்னுமாறு விளங்கும் பூங்கொத்தினை ஏற்ற கூந்தல், கொடிமுல்லை, போன்ற இடை என்னும் இவ் இயல்பு வாய்ந்த இச் சிறுமி யின் பின்னே போய் ஏங்கித் தாழ்ந்து நிற்றலை உடைய அறியாமை உடைய என் நெஞ்சே!
நீ உன் எண்ணங்களை உண்மை என எண்ணி அவற்றை முதலாகக் கொண்டு பலவற்றையும் நினைந்து மிகப் பெரிய துன்பத்தை உடையையாய் வருந்துகின்றாய். அன்றியும், மலை உச்சியினின்று தொடர்புற்று விழுந்த மிக்க வெள்ளத்தால், முதல் நாள் மலர்ந்த மலர்கள் குளிர்ந்த துறைகளில் எல்லாம் விளங்கக் கடற்கரையைக் கரைக்கும் க்ாவிரியான பேராற்றில் கருமணல் பொருந்தும். நீண்ட மடுவின் நிலை கொள்ளாத நீரும் கலங்குமாறு கரிய இருள் பொருந்திய நள் இரவிலே ஒடங்களைச் செலுத்திப் போய், தன் தமையர் விடியற் காலையில் பிடித்து வந்தது திரண்ட கோடுகளை உடைய வாளைமீன் அவ் வாளைமீனுக்கு விலையாக அழகிய வளைந்த கொப்பூழையும் அழகிய சொற்களையும் உடைய பாண்மகள், நீண்ட கொடிகள் அசையும் கள் மிக்க தெருவில் விற்கச் சென்றாள். அங்கு வாங்குபவர் பழைய செந்நெல்லை