பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


முகந்து கொடுப்பதைக் கொள்ளாமல் கழங்கு போன்ற பெரிய முத்துகளுடன் சிறந்த அணிகளையும் பெறுவாள். இத்தன்மை யுடைய வளம்மிக்க ஊர்களை யுடைய பலவேற்களை உடையவன் எவ்வி’.

நன்மை தருகின்ற மொழிகளைச் சொல்லி அடக்கவும், தன் செருக்கு மிகுதியால் அடங்காதவனாய்ப், பொன் போன்ற கொத்துகளாக மலரும் நல்ல மலர்களையுடைய புன்னை மரமான காவல் மரத்தை வெட்ட விரும்பித் திதி யன் என்பவனுடன் போரிட்டு இறந்து போனான் அன்னி. அவனைப் போல் நீயும் இறந்து விடுவாய் போலும்! என்று உணர்ப் புவயின் வாரா ஊடற் போதில் தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறினான்.

196. இவள் நமக்கு இனி என்ன உறவோ? மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு, வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி, புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி அம் கண் இரு விசும்பு விளங்கத் திங்கட் சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து கடி நகர் புனைந்து, கடவுள் பேணி, படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ, வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப், பூக்கனும் இமையார் நோக்குபு மறைய, மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை, பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத் தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத் தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டித், து உடைப் பொலிந்து மேவரத் துவன்றி, மழைபட் டன்ன மணல் மலி பந்தர் இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி, தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின் ‘உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி! முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்,