தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
127
பெரும் புழுக் குற்ற நின் பிறைநுதல் பொறி வியர் உறு வளி ஆற்றச் சிறு வரை திற என ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின், உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப, மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென நாணினள் இறைஞ்சியோளே பேணிப் - பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவிக், கரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.
- - விற்றுற்று மூதெயினனார் அக 136 “என் நெஞ்சமே, குற்றம் இல்லாதபடி சமைக்கப்பட்ட இனிய நெய் மிக்க வெண்மையான சோற்றை எல்லை இல்லாத வள்ளன்மையுடன் உறவினர் உண்ணுமாறு செய்து, பறவை நற்குறியானது இனிதாகப் பொருந்த, தெளிந்த ஒளியையுடைய பெரிய வானம் களங்கம் இல்லாது விளங்க, வெண்கதிர் உரோகிணி கூடிய நல்ல நாள் சேர்க்கையில், திருமண இல்லத்தை அழகாக அலங்கரித்தனர். முதலில் கடவுளை வழிபட்டனர். ஒலிக்கும் மண முழவுடன் பெரிய முரசமும் ஒலிக்கத் தலைவிக்கு மணநீர் ஆட்டினர் மகளிர். அவர்கள் தலைவியைத் தம் கண்களால் இமையாமல் நோக்கிப் பின் நாணத்தால் விரைவாக மறைந்தனர்.
மென்மையான பூவையுடைய வாகையின் புல்லிய புறத்தை உடைய கவர்த்த இலையைக் கன்றால் கறிக்கப்பட்ட பள்ள மான நிலத்தில் படர்ந்த அறுகம்புல்லின் முகிலின் முதல் புெயலால் ஈன்ற நீலமணி போன்ற இதழையுடைய பாவை போன்ற கிழங்கில் உள்ள குளிர்ந்த அரும்புடன் சேரக்கட்டிய வெண்மையான காப்பு நூலை அணிந்தனர். தூய திருமணப் புடவையால் அழகுபெறச் செய்தனர். மழை பெய்தது போல் விளங்கும் பந்தரிலே அணிகளை வியர்வையை விசிறியால் ஆற்றினர். இவளை நன்கொடையாக நமக்கு வழங்கினர். அவ் இயல்புடைய அம் முதல்நாள் இரவில் -
வெறுப்பு நீங்கிய கற்பினையுடைய என் உயிர்க்கு உடம் பாக அடுத்தவள் கசங்காத புதிய ஆடையால் உடல் முழுவ தும் போர்த்தியதால் மிக்க புழுக்கத்தை அடைந்தாள்.