பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

129

.

வலிமை மிக்க தலைமைப் பண்பையும் உடல் வலிமை யையும் உடைய எருமைக் கடாவானது குளிர்ந்த மலர்களை உடைய நீர்நிலையில் விழுந்து பகற்பொழுது முழுதும் சுழன்று திரிந்து பின்பு, மடமையுடைய இளைய எருமை யைத் தொடர்ந்து செல்லும். தோட்டங்களை அடையும்; அதன் பின்பு ஊர்ப் பொது நிலத்திலே தங்கும். இத்தன்மை உடைய ஆராவாரமும் மகிழ்ச்சியும் கொண்ட ஊரானின் தேரானது ஒளியுடைய அணிகலன் அணிந்த பரத்தையர் சேரிக்குப் பல நாள்களாகச் செல்லவில்லை என்கின்றாய். அப்படியானால் - -

மாயம் செய்யும் பரத்தமைத் தொழிலுடைய அவனது வாய்மை போல விளங்கும் சொல்லை மெய் என விரும்பி, பெருங்காற்று வீசுவதால் மழை பெய்யப்பட்ட மலரைப் போல கண்கள் நீரை மார்பில் சொரிந்திடக் கலங்கி ஆயத் தாரும் அயலாரும் ‘இவளது நிலை இங்ஙனம் ஆவதோ? என்று மயங்கவும், பேதையான எம்மைப் போலவே தன் தாய் பேணி வளர்த்த அழகிய நலத்தை வேண்டாது இழப் பாள் ஆகிய அணியை உடையாள் யாரோ அவள் இரங்கத் தக்கவள். என்று வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைவ மறுத்துரைத்தாள்.

198. தலைவன் தொடர்பால் உண்டா பிழை? முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் மூட்டுறு கவரி தூக்கி யன்ன, செழுஞ் செய் நெல்லின் சேயளிப் புனிற்றுக் கதிர் மூதா தின்றல் அஞ்சிக், காவலர் பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும் தீம் புனல் ஊர திறவதாகக் குவளை உண்கண் இவளும் யானும் கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை, காயா ஞாயிற்றாக, தலைப்பெயப் ‘பொய்தல் ஆடிப் பொலிக என வந்து, நின் நகாப்பிழைத்த தவறோ பெருமl