பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


துண்டத்தை அறுத்து விற்றுக் கள்ளுண்டு ஆடி, மீண்டும் வேட்டையாடச் செல்வதை மறந்து உறங்கிக் கிடப்பர் கணவர் மார். அவர்களுக்கு அவர்களின் மனைவியரான பாண் மகளிர் ஆம்பலின் அகலமான இலையில் விரும்பத்தக்க சோற்றைப் பிரம்பினது இனிய பழத்தால் ஆன புளிக் கறியைப் பெய்து இடுவர். இத்தகைய இயல்பு வாய்ந்த ஊரனே!

தன் தந்தையின், கண் அழகு கெடும்படி செய்த தவற்றுக் காக, அழுந்துாரில் வாழும் விரைவாக ஒடும் தேரை யுடைய திதியன் என்பவனைக் கொண்டு, நெடு மொழியை யுடைய கோசர் என்பவர்களைக் கொன்று பகைமை தீர்ந்தாள் அன்னி மிஞரிலி. அவளைப் போல் தான் விரும்பிய படி நடக்கின்ற உன் அழகுக்குப் பொருந்திய பரத்தையைத் தழுவிய நின் மார்ப்ை யாம் திண்டோம். ஆதலால் எம்மை நெருங்கி வராதே என்று பரத்தையைப் பிரிந்து வந்த தலைவனிடம் தலைவி அன்பின் வெறுப்பால் கூறினாள்.

203. என்னென்பேன் இவள் கூற்றை என் எனப்படும்கொல் - தோழி! நல் மகிழ்ப் பேடிப் பெண்கொண்டு ஆடுகை கடுப்ப, நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம் சிறு தொழில் மகாஅர் ஏறிச், சேணோர்க்குத் துறுகல் மந்தியில் தோன்றும் ஊரன், மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன அம்மா மேனி, ஆய்இழை மகளிர் ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து ஆராக் காதலொடு தார் இடை குழைய, முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர் வதுவை மேவலன்ஆகலின், அது புலந்து அடுபோர் வேளிர் வீரை முன்துறை, நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை, பெரும் பெயற்கு உருகி யாஅங்கு, திருந்துஇழை நெகிழ்ந்தன, தடமென் தோளே!

- மதுரை மருதனின் நாகனார் அக 206