தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : {37
என் தோழியே! நல்ல கள்ளுண்ட களிப்புடனே பேடி, பெண் வடிவம் கொண்டு ஆடுபவளது பின் சென்று மேல் வளைந்த கையைப் போல் விளங்கும் பெருத்த முறுக்குண்ட கொம்பைப் பெற்ற எருமை அதன் கரிய தோலினை உடைய பெரிய முதுகின் மீது சிறிய செயலைச் செய்யும் சிறுவர்கள் ஏறி அமர்வர். அத் தோற்றம் தொலைவில் உள்ளவர்க்கு உருண்டை யான கல்லின் மீது அமர்ந்த குரங்கு போல் காணப்படும். இவ் இயல்பு வாய்ந்த ஊரை உடையவன் நம் தலைவன். அவன் -
மாரிக்காலத்து ஈங்கைச் செடியில் தோன்றும் சிறந்த தளிர் போன்ற அழகான மாந்துளிர் போன்ற நிறத்தை யுடைய மேனியையும் ஆராய்ந்தெடுத்த அணியையும் உடைய பர்த்தை அவளது முத்துமாலை அணிந்த பரந்த முலையை உடைய மார்பில் மிக்க காதலுடன் மலர் மாலை இடைப் பட்டுக் குழைய முழவின் ஒலி ஓய்தலிலாத விழாவுடைய பெரிய மணம் செய்து கொள்வதில் விருப்பம் உடையவன்.
ஆதலால் அச் செயலை வெறுத்து போரை வெல்ல வேளிர்களுக்கு உரிய வீரை என்ற இடத்தில் உள்ள துறை யின் முன்னிடத்தில் நீளமாகக் குவிந்து கிடக்கும் வெள்ளை உப்பின் அளவற்ற குவியல் பெருமழையால் கரைந்தது போல் என் பெரிய மென்மையான தோள்கள் மெலிந்து வளைகள் நெகிழ்ந்தன. என் நிலை இப்படியாகின்றது: ஆக நீ ஊடல் நீங்கித் தலைவனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறும் இந்த விறலியின் சொல்லை நாம் என்ன வென்று கூறுவது? என்று வாயில் வேண்டிச் சென்ற விறலிக்கு தலைவி வாயில் மறுத்தாள்.
204. துன்பமடையச் செய்வேன் தலைவியை “நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள்தான் புனல் அடைகரைப்படுத்த வராஅல், நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும் தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப் பெட்டாங்கு மொழி என்ப; அவ் அலர்ப் பட்டனம் ஆயின், இனி எவன் ஆகியர்;