138
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும் கழனி உழவர் குற்ற குவளையும், கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு, பல் இளங்கோசர் கண்ணி அயரும், மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல் ஆதன் எழினி அருறத்து அழுத்திய பெருங் களிற்று எவ்வம் போல, வருந்துபர்மாது, அவர் சேரி யாம் செலினே.
- ஐயூர் முடவனார் அக 216 கயிற்றையுடைய தூண்டிற்கோலால் மீனைப் பிடிப்பாள் பாணர் மகள். அவள் நீருடை கரையில் இழுத்துப் போட்ட வரால் மீனைப் பன்னாடையால் வடி கட்டிய கள்ளைக் குடித்து மயங்கியிருந்த தன் தந்தைக்கு வஞ்சி மரத்தின் விறகால் சுட்டு வாயில் ஊட்டுவாள். இத்தகைய இயல்பு உடைய குளிர்ந்த நீராடும் துறையை உடைய தலைவனின் மனைவியர், குற்றம் அற்ற என்னைத் தாம் விரும்பியபடி எல்லாம் பழி தூற்றுகின்றாள் என்று கூறுகின்றனர். அத் தகைய பழிக்கு நாம் ஆளாகி விட்டோம் என்றால் இனி யாது நிகழ்ந்தாலும் நிகழ்க என்று அவர்க்குச் செய்யத் தக்கதைச் செய்தே ஆக வேண்டும். அவர் வாழ்கின்ற சேரி இடத்தே அவர் காணும்படி யாம் செல்வோமென்றால் அவர் வருந்த அதுவே போதும். கடலில் ஆடும் பெண்டிர் கொய்து வந்த புலிநகக் கொன்றை மலரையும், வயலில் உழவர் பறித்து வந்த குவளை மலரையும், காவற் காட்டை யுடைய முல்லை நிலத்தே பூத்த முல்லைப் பூவுடன் சேர்த்துப் பல இளைய கோசர்கள் மாலையாய்க் கட்டி விளையாடுவார்கள். அத்தகைய வளத்தையும் புதிய வரு வாயையும் கொண்ட “செல்லுர்த் தலைவன் ஆன ‘ஆதன் எழினி’ என்பான் பகைவர் மீது எறியும் போது சிதையாத கரையைப் பெற்ற வெண்மையான வேல் மார்பில் பாய்ச்சப் பெற்ற ஆண் யானையின் துன்பத்தைப் போன்று வருத்தம் அடைவர். என்று தலைவன் உறவினர் கேட்டிடப் பரத்தை தன் பாங்காயினாராயிடம் சொன்னாள்.