பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

139


205. தலைவியின் நீங்காத ஊடல்

உணர்குவென்அல்லென் உரையல் நின் மாயம் நாண் இலை மன்ற - யாணர் ஊர! அகலுள் ஆங்கண், அம் பகை மடிவைக் குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின், பழனப் பைஞ் சாய் கொழுதிக் கழனிக் கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஒப்பும், வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான், பல்வேல் மத்தி, கழாஅர் முன்துறை, நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய, விடியல் வந்த பெருநீர்க் காவிரித்ங் தொடி அணி முன்கை நீ வெய்யாளொடு முன் நாள் ஆடிய கவ்வை இந் நாள் வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த் தித்தன் வெளியன் உறந்தை நாள் - அவைப் பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சிப், போர்அடு தானைக் கட்டி பொராஅது ஒடிய ஆர்ப்பினும் பெரிதே. - பரணர் அக 226 புதிய வருவாயை உடைய ஊரனே, நீ பொய்யான சொற்களை என்னிடம் சொல்லாதே. நான் அவற்றை ஏற்றுக் கொள்ளேன். மெய்யாக நீ நாணம் அற்றவன்!

அகன்ற ஊரில், அழகிய பகுப்பைக் கொண்ட தழை உடையையும், சிறிய வளையலையும் உடைய மகளிர் நீர் விளையாட்டை வெறுப்பின், நீர் நிலையில் உள்ள கோரை களைப் பறித்துக் கழனியாகிய கரந்தைக் கொடி படர்ந்த வயல்களிலே இரையைத் தேடும் நாரையை ஒட்டுவர். அத் தகைய இடமான, வலிய வில் பொருந்திய வலிய தோள்களை யுடைய பரதவரின் தலைவன் ‘மத்திய என்பான். அவனது கழார் என்ற ஊரில் அமைந்த துறையில், நீண்ட வெண்மை யான மருத மரத்துடன் வஞ்சி மரத்தையும் சாய்த்து விடியற் காலையில் பெருகி வந்த வெள்ளத்தை உற்ற காவிரியாற்றில், வளையலை அணிந்த நின்னால் விரும்பப் பட்ட பரத்தை யுடன் நீ நேற்று விளையாடினாய். அதனால் எழுந்தது அலர்.