பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


அது, இன்று ஆற்றல் மிக்க வன்மை யுடைய பாணன் என்பவனுடன் கூடிப் போரிடுதலில் வல்ல படையைப் பெற்ற ‘கட்டி என்பான் போரிட வந்து, ‘வெளியன் தித்தன் என்ப வனின் அவையிலே உண்டான இனிய ஓசையுடைய கிணைப் பறையினது ஒலியைக் கேட்டு, அவனது பெருமையை உணர்ந்து, அஞ்சிப் போர் செய்யாது ஒடியபோது எழுந்த ஆரவாரத்தை விடப் பெரியதாகும், என்று தலைவனைத் தோழி வாயில் மறுத்தாள்.

206. ஊடாமைக்குக் காரணம்

மணி மருள் மலர முள்ளி அமன்ற, துணி நீர், இலஞ்சிக் கொண்ட பெரு மீன் அரி நிறக் கொழுங் குறை வெளவினர் மாந்தி, வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை, இடை நிலம் நெரிதரும் நெடுங் கதிர்ப் பல்சூட்டுப் பணி படு சாய்ப்புறம் பரிப்பக் கழனிக் கருங் கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப்பூ மயங்குமழைத் துவலையின் தாஅம் ஊரன் காமம் பெருமை அறியேன், நன்றும் உய்ந்தனென் வாழி, தோழி அல்கல் அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்பக் கொடுங் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை அறியாமையின் அழிந்த நெஞ்சின் ஏற்று இயல் எழில் நடைப்பொலிந்த மொய்ம்பின் தோட்டுஇருஞ் சுளியல் மணந்த பித்தை, ஆட்டன்அத்தியைக் காணி ரோ?'என நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின் ‘கடல்கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த ஆதிமந்தி போல ஏதம் சொல்லிப் பேதுபெரிது உறலே. - பரணர் அக 236 தோழியே, வாழ்க! வெண்மையான நெல்லை அறுப்பவர் நீலமணியைப் போன்ற மலர்களைக் கொண்ட நீர் முள்ளிச் செடி நிறைந்த தெளிந்த நீரையுடைய மடுவில் கவர்ந்த பெரிய