தொகை - வகை - உரை : த. கோவேந்தன் இ 14|
மீனின் வளவிய துண்டைக் கவர்ந்து உண்டு விட்டுப் போன இடமாகிய களம். அதில் பின்பு அவர்கள் கொண்டுவந்து இட்ட வெற்றிடம் இல்லாது செறிந்த நீண்ட கதிரையுடைய நெற்கட்டுகள் உள்ள பணியால் நனைந்த பக்கங்கள் தாங்கும் படி, கழனியின் வரம்பின் மேல் நின்ற மாமரத்தின் கொம்பு களில் மலர்ந்த புதிய பூக்கள் மழைத்துளியைப் போல் பரவிக் கிடக்கும் ஊரன் நம் தலைவன். அவனுடைய காமத்தின் சிறப்பை அறியாதவள் ஆனேன் நான்.
இரவில் அழகுடன் விளங்கும் சாந்துடன் அழகிய பட்டாடை ஒளி செய்ய, வளைவான காதணி அணிந்த மகளிரைப் போல் நம் தலைவன் நானத்துடன் இருந்த இருப்பைப் பார்த்து என் மடமையால் உருகிய நெஞ்சினேன் ஆனேன்.
ஆனதால் தன் கணவனை இழந்ததால் அழுத கண்களை உடைய ‘ஆதிமந்தி'யைப் போன்று, காளைபோன்ற எழுச்சி யுடைய நடையையும் பொலிவான தோளையும் தொகுதி யான கரிய சுருள் கொண்ட தலைமயிரினையும் பெற்ற ‘ஆட்டன் அத்தி என்ற தலைவனைக் கண்டீரோ? என்று நாடெல்லாம், ஊரெல்லாம் போய் என் தலைவனைக் கடல் கொண்டு ஒளித்தத போலும் நீர் கொண்டு ஒளித்தது போலும் என்று சொல்லி என் துன்பத்தைப் பலரும் அறியச் சொல்லி தேடிப் போய் மயங்குவதனின்றும் பெரிதும் தப்பினேன் என்று ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன் நீங்கியபோது பின் புகுந்த தோழியிடம் தலைவி கூறினாள்.
207. நின் ஊடலைப் போக்க இயலாது பினர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக, நெடு நீர்ப்பொய்கைத் துனையொடு புணரும் மலி நீர், அகல் வயல் யாணர் ஊர! போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல்யாறு ஆடினை என்ப, நெருநை அலரே