142
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணிவாயில் சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின் இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய, பதினொரு வேளிரொடு வேந்தர் சாய, மொய் வலி அறுத்த ஞான்றைத், தொய்யா அழுந்துர் ஆர்ப்பினும் பெரிதே.
- பரணர் அக 246 பொருக்கையுடைய வயிற்றையும் பிளந்த வாயையும் உடைய ஆண்சங்கு. அது ஆரல் மீன் கரி கூறுபவனாக’ விளங்க, ஆழ்ந்த நீரை யுடைய பொய்கையில் பெண் சங்குடன் மணம் கொள்ளும். இத் தன்மையான நீர் நிறைந்த அகன்ற வயல்களை யுடைய புதிய வருவாய் மிக்க ஊரை உடையவனே!
மலர்கள் நிறைந்த கூந்தலைக் கொண்ட உன்னால் விரும்பப் பட்ட பரத்தையுடனே பூந்துகள் மிக்க காஞ்சி மரச் சோலை சூழ்ந்த அகன்ற ஆற்றில், நேற்று நீ விளை யாடினாய் என்று பலரும் உரைக்கின்றனர். அங்ஙனம் நீ பரத்தையுடன் விளையாடியதால் எழுந்த அலர், மிக்க சினமும்,வலியும் கொண்ட பெரும்புகழ் பொருந்திய கரிகால் வளவன், ஆரவாரிக்கும் கள் வளம் வாய்ந்த ‘வெண்ணி வாயில் என்று மிடத்தே, சிறப்புடைய பகை மன்னர் பகை கொண்டு எழுந்த போரில், மிக்க ஒலி பெற்ற வீரமுரசம் போர்க் களத்தில் கிடக்க, வேளிர் பன்னிருவருடன் இருபெரு வேந்தரும் நிலை கெட, அவர்களின் வலிமையைக் கெடுத்த நாளில், “அழுந்துாரில் எழுந்த குறையாத ஆரவாரத்தை விடப் பெரியதாய் உள்ளது, எனத் தோழி தலைவனை வாயில் மறுத்தாள்.
208. நீ உன்னவளுடன் வையையாற்றில் திளைத்தாய் பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில்
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை நொடி விடு கல்லின் போகி அகன்துறைப்