பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

145


அணங்குடை வரைப்பகம் பொலியவந்து இறுக்கும்

திருமணி விளக்கின் அலைவாய்ச்

செரு மிகு சேனயொடு உற்ற சூளே! - பரணர் அக 266

“தலைவனே, நேற்று, கரையின் உச்சி வரை உயர்ந்த பெரிய பரப்பையுடைய அழகிய இனிய மனத்துக்கு விருப்ப மான புதுநீர் வெள்ளத்தில் வலிமை மிக்க ஆண் யானை யைப் போல் தெப்பத்தின் தலைப்புறத்தைப் பற்றி நின் துணையான மகளிருடன் நரந்தம் புல்லின் மணம் வீசும் கரிய கூந்தலை யுடைய நீர் விளையாட்டுக்குரிய அணிகளை அணிந்து, நீரில் புடை பெயர்ந்து விளையாடி அம் மகளிரின் மிக்க அழகையுடைய கண்கள் உன்னைப் பார்க்குந்தோறும், நீ விருப்பம் தவிராயாகிக் காமம் அளவு கடந்து மிகுதலால் நாணத்தை இழந்து விளையாடினனை என்று கூறுவர்.

அச் செயல்தான், யாழ் இசை ஒலிக்கும் தெருக்களை யுடைய நீடுரின் தலைவன் வாள் வெற்றியுடைய ‘எவ்வி’ என்பான். தன் ஏவுதலை ஏற்றுக் கொள்ளாதவரான பசுமை யான பொன் அணி பூண்ட பகைவரின் மிக்க வன்மையைக் கெடுத்த ‘அரிமணவாயில் உறத்துர்’ என்ற அங்கு அந்த மன்னன் அளித்த கள்ளுடன் கூடிய பெருஞ்சோறு வழங்கி னான். அந்தப் பகற்பொழுதில் அங்கே ஆரவாரம் உண்டா கியது. அது போல் மிகப் பெரிதான அலராக ஆகியது.

இப்போது அச் செயல் எனக்குத் துன்பத்தைத் தர வில்லை. பக்கத்தில் உள்ள வயலில் உழுபவர் செருக்கு மிக்கு எழுப்பிய ஒலிக்கும் ஆரவாரத்தை அஞ்சிப் பறந்து போன மயில், தெய்வத்தையுடைய குன்றில் வந்து தங்கும் இயல் புடைய அழகிய மணிவிளக்கு ஒளிரும் திருச்சீரலைவாயிலில் வீற்றிருக்கின்ற போர் வலிமை மிக்க முருகப்பெருமானுடன் பொருந்திச் செய்த குளுறவே பெரிதும் துன்பத்தைத் தரு கின்றது” என்று பரத்தையிற் பிரிந்து வந்து கூடிய தலை வனிடம் தலைவி கூறினாள்.

210. சிறைப்படுத்துவேன் மார்பை

நீள் இரும் பொய்கை இர்ை வேட்டு எழுந்த வாளை வெண் போத்து உணிஇய, நாரை தன்