பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

147


21. பொய் தோன்றின் உண்மை எங்கு உளதாம்?

வெள்ளி விழுத் த்ொடி மென் கருப்பு உலக்கை, வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க, மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ, காஞ்சி நீழல், தமர் வளம் பாடி, ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த இறாஅல் அருந்திய சிறுசிரல் மருதின் தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர! விழையா உள்ளம் விழையும் ஆயினும், என்றும், கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு, அறனும் பொருளும் வழாமை நாடி தன் தகவு உடைமை நோக்கி, மற்று அதன் பின் ஆகும்மே, முன்னியது முடித்தல், அணைய, பெரியோர் ஒழுக்கம், அதனால் அரிய பெரியோர்த் தெரியுங் காலை, நூம்மோர் அன்னோர் மாட்டும், இன்ன பொய்யொடு மிடைந்தவை தோன்றின், மெய் யாண்டு உளதோ, இவ் உலகத்தானே?

- ஒரம்போகியார் அக 286 ஊரில் உள்ள பேதைப் பருவ மங்கையர், மென்மையான கரும்பை வெண்மையான சிறந்த பூண் பூண்ட உலக்கை யாகக் கொண்டு கொடியைப் போன்ற சிறிய இடையானது முன்னும் பின்னும் அசையும்படி மீன் முட்டைகளைப் போன்ற வெண்மையான மணலைக் குவித்துக் கொண்டு காஞ்சி மரத்தின் நிழலில் தம் சுற்றத்தாரின் செல்வப் பெருக்கினைப் புகழ்ந்து பாடிக் கொண்டு விளையாடுவர். அப்போது இறால் மீனைத் தின்ற மீன்கொத்திப் பறவை மருதமரத்தின் தாழ்ந்த கிளைகளில் அப் பாடலைக் கேட்டு உறங்கும். இத்தன்மை பொருந்திய குளிர்ந்த நீராடும் துறையை உடைய தலைவனே!

எப்போதும் எதனையும் விரும்பாத பெருந்தன்மை பெற்ற தம் உள்ளமானது ஒரேவழி மயங்கி ஒன்றை விரும்பு மாயினும், நாள்தோறும் தாம் கேட்ட அறிவுரைகளைத்