பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


தோட்டியாகக் கொண்டு, உள்ளம் என்ற யானையைத் தடுத்து நிறுத்தி, அறமும் பொருளும் வழுவாமையை ஆராய்ந்து, தம் தகுதி மிக்கமையை உணர்ந்து, அதன் பின்பே தாம் கருதியதை முடிப்பது உளதாகும். பெரியோர் ஒழுக் கங்கள் அத்தகைய தன்மை கொண்டனவாம். அதனால், அரியவற்றைச் செய்யும் பெரியோர் செயல்களை ஆராயு மிடத்து உம்மை ஒத்த பெரியோரிடத்தும் இத்தகைய பொய் யுடன் கூடிய மொழிகள் தோன்றுமானால் இவ் உலகத்தில் மெய் எங்கு உளதாகும்? யான் அறியேன், என்று மணப்பேன் என்று நீங்கும் தலைவன், தலைவியைக் காத்துக் கொள்ள வேண்டும் தோழியைக் கைப்பற்றியவனுக்குத் தனக்குச் சூளுரைத்ததாகக் கருதி தோழி சொன்னாள்.

212. என்னால் இயலாது தலைவியின் சினம் போக்க

கோதை இணர, குறுங்கால், காஞ்சிப் போது அவிழ் நறுந் தாது அணிந்த கூந்தல், அரி மதர் மழைக் கண், மாஅயோளொடு நெருநையும் கமழ் பொழில் துஞ்சி இன்றும், பெரு நீர் வையை அவளொடு ஆடிப், புலரா மார்பினை வந்து நின்று, எம்வயின் கரத்தல் கூடுமோ மற்றே? பரப்பில் பல் மீன் கொள்பவர் முகந்த இப்பி நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும் பேர் இசைக் கொற்கைப் பொருநன், வென் வேல் கடும் பகட்டு யானை நெடுந் தேர்ச் செழியன், மலை புரை நெடு நகர்க் கூடல் நீடிய மலிதரு கம்பலை போல, அலர் ஆகின்று, அது பலர் வாய்ப்பாட்டே

- மதுரைப் பேராலவாயர் அக 296 மாலையைப் போன்ற பூங் கொத்துகளையுடைய சிறிய அடியுடைய காஞ்சி மரத்தின் மலரின் பூந்துகளை அணிந்த கூந்தலையும், சிவந்த வரி பரவிய மதர்த்த கண்களையும் உடைய மா நிறத்தையுடைய பரத்தை, அவளுடன் நேற்றும்