14
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
நின்னுடன் கொண்டு செல்வாயாக என விரும்பி ஒழுகினோம்” என்றாள் தோழி.
Geog8) 11. நல்லன் அல்லன்
மனை நடு வயலை வேழம் சுற்றும்
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி,
‘நல்லன் என்றும் யாமே,
t e • ? - * * -
அல்லன்’ என்னும் என் தடமென் தோளே. - ஐங் 11
தலைவி “இல்லத்தில் நடப்பட்ட பசலைக் கொடிபோய் நாணலைச் சுற்றிக் கொண்டு வளரும் துறை பொருந்திய ஊரனின் கொடுமைக்கு வெட்கி, நாம் அவனை நல்லவன் என்று கூறினோம். ஆயினும் என் பெரிய மென்மையான தோள்கள் ஆற்றாமல் தம் மெலிவால் அவன் நல்லவன் அல்லன் எனக் காட்டி நின்றன” என்று பாங்கிக்குக் கூறினாள்.
12. அவன் தோள் தோற்க
கரை சேர் வேழம் கரும்பில் பூக்கும்
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுகதில்ல, யாமே,
தோற்கதில்ல என் தட மென் தோளே. - ஐங் 12
“கரையில் நின்ற நாணல் வயலில் உள்ள கரும்பைப் போல் மலரும் துறை பொருந்திய ஊரனான தலைவனின் கொடுமையை யாம் மிகவும் ஆற்றியிருப்போமாக. என் பெருமையும் மென்மையும் உடைய தோள்கள் ஆற்றாதன வாய்த் தோன்றி மெலிவனவாகுக. தோற்காத இடத்து எம்மைப் போல் ஆற்றியிராமல் வேறுபாடு மெய்யில் நிறுத்தித் துயர் செய்யும்” என்று தலைவி தன்னுள்ளே சொல்லினாள்.
13. கள்ள உறவினர் உறங்கார்
பரியுடை நல் மான் பொங்கு உளை அன்ன அடகரை வேழம் வெண் பூப் பகரும்,