பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


பெரும்புகழ் பொருந்திய தலைவனே! பரந்த நீர் நிலையில் உள்ள பிரம்போடு கூடி நீண்டு வளர்ந்திருக்கும் முள்ளை யுடைய ஈங்கையின் பஞ்சு போன்ற துய்யினைக் கொண்ட புதிய பூவும் மா மரத்தின் தளிரும் தன்னைத் தடவுதலால் மீனை யுண்ட நாரை உறங்கும். இத்தகு நீர்வளம் கொண்ட வயலில் உள்ள கழனிக் கரும்பின் சாய்ந்த பக்கத்தில் ஊர்ந்து சென்று வயலில் வாழும் ஆமை இளவெயிலில் காய்கின்ற் நெற் கூடு களையுடைய தெருக்கள் அமைந்த வளமுடைய ஊரனே!

சிறந்த வெண்சுடர் போன்ற நெற்றியையும் விளங்கும் அணியையும், உடைய நின் பரத்தையான ஒருத்தி, நின்னை இகழ்ந்த சொல்லையும் சொல்லி, அழகிய இதழையுடைய குளிர்ந்த கண்ணால் வருத்தம் மிகப் பார்த்து, நின் மார்பில் அணிந்த மணம் கமழும் மாலையையும் அறுத்து, உன்னுடன் ஊடிச் சிறு கலாம் செய்து மணல் நிறைந்த எம் தெரு வழியே சென்றாள் அல்லளோ!

இதுதான் நின் தலைமைத் தன்மையோ? எம்மை ஒரு பொருளாக எண்ணிப் போற்றாமல் அகன்று செல்வீராக? என்று தோழி தலைவனை வாயில் மறுத்தாள்.

214. ஊடுபவர் அறிவில்லாதவர் ‘துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை, அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து, தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட, பைந் நின வராஅல் குறையப் பெயர்தந்து, குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப் போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன் தேர் தர வந்த, தெரிஇழை, நெகிழ் தோள் ஊர் கொள்கல்லா, மகளிர் தரத் தர, பரத்தைமை தாங்கலோ இலென் என வறிது நீ புலத்தல் ஒல்லுமோ? - மனை கெழு மடந்தைஅது புலந்து உறைதல் வல்லியோரே செய்யோள் நீங்க, சில் பதம் கொழிந்து, தாம் அட்டு உண்டு, தமியர் ஆகி,