பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

151


தே மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப வைகுநர் ஆகுதல் அறிந்தும், அறியார் அம்ம, அஃது உடலுமோரே!

- ஒரம்போகியார் அக 316 துறையில் மீன்கள் இயங்கும் பெரிய நீர் மிக்க பொய்கை யில் உள்ள ஆம்பல் மலரை மேய்ந்த வளைந்த கொம்பையும் குளிர்ந்த முதுகையும் உடைய முதிய எருமைக்கடா, மிக்க சேற்றுக் குழம்பில் கிடந்து இரவெல்லாம் துயிலும். பின் கதிரவன் உதித்த காலையில் பசுமையான நிணத்தைத் தின்ற வரால் மீன்கள் காலில் மிதிபட்டு அழிய வெளிப்படும் வெண்மையான பூக்களை யுடைய பகன்றைக் கொடியைச் சூடிக் கொள்ளும். பின் பழைமைமிக்க ஊரில் போரில் வெற்றி கொண்டு வருவது போன்று புகும். இத் தன்மை பெற்ற ஊரினையுடைய தலைவன்.

அவனது விருப்பப்படி ஏவலர் தேரில் கொணர்ந்த விளங்கும் அணிகள் நெகிழப் பெற்ற தோள்களையுடைய ஊர் தாங்காத மிக்க பரத்தையர், பரத்தமையை மேன்மேலும் தன்னிடம் அடையச் செய்ய, அதனால் பரத்தமை ஒழுக்கத்தை ஒழிவில்லாது மேற்கொண்டுள்ளான் என்று கூறி, மனை வாழ்க்கை பொருந்திய கற்புடை மங்கையான நீ பயனில்லாது அவனிடம் ஊடியிருத்தல் பொருத்தமாகுமோ?

தலைவன் பரத்தமையை எண்ணி ஊடிப் பிரிந்து வாழும் வன்மையுடையவர். தம்மிடத்தினின்று திருமகள் நீங்க, சிறிய அரிசியைப் புடைத்துத் தாமே சமைத்து உண்பவராய்த் தனித்தவர் ஆவர்; தேன் போலும் இனிய சொல்லை யுடைய குழவியர் பால் இல்லாது சுருங்கிய முலையைச் சுவைத்துப் பார்க்க எளிமையுடையராய் இருப்பர். இதை நன்கு அறிந்தும் தலைவனது பரத்தமை குறித்து மாறுபாட்டை அடைபவர் அறிவு அற்றவர் ஆவர், எனத் தலைவனிடம் வாயில் நேர்ந்த தோழி, தலைவியிடம் சொன்னாள்.

215. போ அவளுடன் புனலாட

ஊரல் அவ் வாய் உருத்த தித்தி, பேர் அமர் மழைக் கண், பெருந் தோள், சிறு நுதல்,