பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

155


பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊரlயாம் அது பேணின்றோ இலமே - நீ நின் பண் அமை நல் யாழ்ப் பாணனொடு, விசி பிணி, மண் ஆர், முழவின் கண் அதிர்ந்து இயம்ப, மகிழ் துணைச் சுற்றமொடுமட்டு மாந்தி, எம்மனை வாராயாகி, முன் நாள், நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம் மனைக் குறுந் தொடி மடந்தை உவந்தனள் - நெடுந் தேர், இழை அணி யானைப் பழையன் மாறன், மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் * வெள்ளத் தானையோடு வேறு புலத்து இறுத்த கிள்ளி வளவன் நல் அமர் சாஅய், கடும் பளிப்புரவியொடு களிறு பல வவ்வி, ஏதில் மன்னர் ஊர் கொள, கோதை மார்பன் உவகையின் பெரிதே. - நக்கீரர் அக 346 மழைக் காலத்தில் வீட்டினது இறப்பின் மேல் உள்ள சுண்ணாம்பு பூசிய குளிர்ந்த மேலிடம் போன்ற இறகை யுடையது, இறுகக் குறுகப் பறக்கும் ஆண் கொக்கு. அது வெள்ளியால் ஆன வெண்மையான இதழ் போன்ற கயல் மீனைக் குத்தக் கருதியது. கள்ளை உண்ட மகிழ்ச்சியால் ஆன மிக்க செருக்கைக் கொண்ட உழவர் காஞ்சி மரத்தின் குறிய துண்டுகளை நட்டு, இனிய சுவையுடைய மென்மை யான தண்டையுடைய கரும்பின் பல துண்டுகளைக் குறுக்காக அடைத்து, நெற்பயிரையுடைய வயலாகிய பசுமையான பள்ளங்களில் நீரைத் தேக்கி, வருந்தி அமைந்த வலிய இடத்தை யுடைய வளைவான அணையின் மேலே வழிந்து விரைந்து வரும் நீரைப் பார்த்து, மெல்ல மெல்ல அதன்மேல் சென்று நோக்கியிருக்கும். இத்தகைய பயன் பொருந்திய ஊரை யுடையவனே!

நீங்கள் உம் பரத்தைமையை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்றாலும் நீ நின் பண் செய்யப்பட்ட நல்ல யாழை உடைய பாணனுடன், இழுத்துக் கட்டிய மண் பூசப் பட்ட தண்ணுமையின் கண்கள் அதிர்ந்து முழங்க, மகிழ்ச்சி யுற்ற உனக்குத் துணையாகிய சுற்றத்தவருடன் கள்ளை