156
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
உண்டு எம் இல்லத்துக்கு வராமல், முன் ஒரு நாள் உங்கள் இல்லமாகிய பர்த்தை இல்லத்துக்குப் போய் அடைந்தாய். அப்போது, அந்த இல்லத்தில் வாழ்கின்றவள் சிறிய வளை யலை அணிந்த உன் பரத்தை நீண்ட தேரையும் அணியை அணிந்த யானையையும் உடையவன் பாண்டியன் பழையன் மாறன். அவனை மாளிகைகள் மிக்க தெருக்களை யுடைய மதுரையிலேயே மிக்க படையுடன் வேற்றுப் புலத்தில் போர் செய்ய வந்து தங்கியிருந்த கிள்ளிவளவன், நல்ல போரில் சாய்த்தான், அவனுடைய விரைந்த செலவையுடைய குதிரை களுடன் ஆண் யானைகள் பலவற்றையும் பற்றிக் கொண்ட, பகை மன்னரின் ஊரைக் கவர்ந்து கொள்ள, கோதை மார்பன் என்ற சேரமன்னன் மகிழ்ச்சி அடைந்தான். அவன் மகிழ்ச்சியை விட நின் பரத்தை பெரிதாய் மகிழ்ந்தாள் அல்லளோ! யாங்கள் அதனைக் கருதியதில்லை. அங்கின மாகவும் அதை நீ மறுப்பது மிகுந்த நகைப்பை உண்டாக்கு கின்றது, என்று தோழி தலைவனை வாயில் மறுத்தாள்.
218. நினையாமல் இரார் நின் பார்வையை
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை உகு வார் அருந்த பகு வாய் யாமை கம்புள் இயவன் ஆக, விசி பிணித் தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் - இடை நெடுந் தெருவில் கதுமெனக் கண்டு, என் பொற் தொடி முன்கை பற்றினனாக, அன்னாய் என்றனென்; அவன் கை விட்டனனே, தொல் நசை சாலாமை, நன்னன் பறம்பில் சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கற் போல் நாவினோனாகி, மற்று அது செப்பலென் மன்னால், யாய்க்கே, நல் தேர்க் கடும் பகட்ட யானைச் சோழர் மருகன் நெடுங் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் நல்லடி உள்ளானாகவும், ஒல்லார் கதவம் முயறலும் முயல்ப, அதாஅன்று, ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது,