தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
159
என்று பரத்தையிடமிருந்து பிரிந்து வந்த தலைவனிடம் தோழி, வாயில் மறுத்தாள்.
220. என் அழகை எனக்குத் தா செல்லல், மகிழ்ந நிற் செய் கடன் உடையென்மன் - கல்லா யானை கடி புனல் கற்றென, மலி புனல் பொருத மருது ஒங்கு படப்பை, ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை, கலி கொள் சுற்றமொடு கரிகால் காண, தண் பதம் கொண்டு, தவிர்த்த இன் இசை ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள, கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று, இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப, புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து, காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ! நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின் பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின் அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி, வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய, துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும், பொற்புடைக் குரங்குஉளைப் புரவிக் குட்டுவன் மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே!
- பரணர் அக 376 தலைவ, செல்லாதே. நின்னிடம் செய்யக் கூடிய கடமை எனக்கு உளது. பாகனால் பழக்கப்படுத்தாத காவலையுடைய யானை நீரில் விளையாடலைக் கற்றதாக அதனால் மிக் கெழும் நீர் மோதிய மரங்கள் உயர்ந்த தோட்டத்தையும் கதிர்களைப் பெற்ற வயல்களையுமுடைய கழாஅர் என்ற ஊரின் முன்பு ஆரவாரம் உடைய உறவினருடன் கரிகால் வளவன் கண்டு மகிழும்படி, புனல் விழாக் கொண்டாடி இனிய இசை த்ங்கிய வீரக்கழல் சிவந்த அடியில் புரளக் கரிய கச்சினைக் கட்டிய காட்சிக்கு இனிய வயிற்றில் கட்டப்பட்ட மணியுடன் பெரிய பொன் ஒலிக்க, புனலில் விரும்பி ஆடிய அத்தி என்றவனின் அழகை விரும்பிக் காவரி