160
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
யாறு அவனைக் கவர்ந்து கொண்டு போய்க் கடலில் ஒளித்தது போல், சேரிப் பரத்தை உன்னைக் கவர்ந்து போனாள். அது கொண்டு உம்மை யாம் வெறுக்கவில்லை. அப்படியிருந்தும், நெற்றி பசலை அடைந்தது காண்பாயாக!
சேற்றில் உள்ள அழகிய துளையுடைய ஒள்ளிய வள்ளைக் கொடியைப் பின்னுவித்து வளமான நெல்லின் வளைந்த கதிர் விரிய, துய்யினைத் தலையில் உடைய வளைந்த இறால் மீன் பாயும் இடமான அழகுடைய வளைந்த பிடரி மயிரையுற்ற குதிரையையுடைய குட்டுவனின் ‘மாந்தை’ என்ற ஊரைப் போன்ற என் அழகைத் தந்து விட்டுச் செல்லுக. உன்னிடம் செய்யும் கடமைகளை மிகவும் உடையோம். என்று காதற் பரத்தை சொன்னாள்.
221. நாணம் கொண்டேன் கணையனைப் போல்
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து வாளை நாள் இரை தேரும் ஊர! - நாணினென் பெருமl யானே - பாணன் மல் அடு மார்பின் வலி உற வருந்தி, எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன் நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த திறன் வேறு கிடக்கை நோக்கி, நல் போர்க் கணையன் நாணியாங்கு - மறையினள் மெல்ல வந்து, நல்ல கூறி ‘மை ஈர் ஒதி மடவோய் யானும் நின் சேரியேனே அயல் இலாட்டியேன் நுங்கை ஆகுவென் நினக்கு என, தன் கைத் தொடு மணி மெல் விரல் தண்ணெணத் தைவர, நுதலும் கூந்தலும் நீவி, பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே. - பரணர் அக 386 நீர் நிலையில் உள்ள புலால் நாற்றமுடைய பெரிய ஆண் நீர் நாய், விடியற்காலையில் வாளையான உணவை ஆராயும் ஊரையுடைய தலைவனே, பெரும!