பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும், ‘நீட்டித்தாய் என்று, கடாஅம், கடுந் திண் தேர் பூட்டு விடாஅ நிறுத்து. - நல்லந்துவனார் கலி 66 பெருகும் நீர்நிலை. அதிலே மலர்ந்த கருங்குவளை, அம் மலர்களைக் கொண்டு விற்பவர், வயலில் பறித்த மலர் களைச் சுமந்து வருகின்றனர். அம் மலர்ச் சுமையைச் சூழ்ந்த ஊரிடத்துப் புகுகின்றது பாடும் வண்டு. அந்த வண்டுக்கு சிறந்த இலக்கணம் கொண்ட அழகிய யானையின் நாறும் நாற்றத்தை யுடைய மதத்தை அதில் படிந்திருந்த வண்டுகள் விருந்தாகப் படைக்கும். அப் பூக்களுடன் வந்த வண்டுகள் பகற்பொழு தெல்லாம் தங்கி இரவில் முன்கையில் கிடந்த தொடியில் தம் கணவர் மேனி வடுவைப் பெறமாறு கணவரைக் கூடிய மகளிரின் தேன் மணக்கும் மலரில் கிடந்து அரும்பாகிய தன்மை முற்றி மலர்ந்த முல்லை மலர்களில் பாய்ந்து தேனையுண்டு, பின் வேறு சில பூக்களின் தேனை உண்ண வேண்டும் என்ற நினைவே இல்லாது முன் தாம் விரும்பிய மலர்ப் பொய்கையை மறக்கும்; அதனைத் திரும்ப ஒரு காலத்தும் நினைக்காது. இத்தகைய நீர் வளம் வாய்ந்த நல்ல ஊரனே!

ஆரவாரமுடைய சிறப்பற்ற பரத்தையரைப் பூப்பேசி மணந்து கொண்ட திருமணத்தில் உண்டான நின் மணத்தை விடியற்காலத்தில் யாங்கள் பெற்றோம். இங்ஙனம் பெற்றது, மெல்லிய எம் தோள்கள் மெலியுமாறு உன் மனத்துக்கு விருப்பமான பரத்தையரைக் கூடி மண இல்லத்தில் இருந்தாய் என்று பிறர் சொல்ல, உனக்கு உண்டான வளப்பத்தை விடச் சிறந்த ஒன்றன்றோ?

நின் மார்பு மாலையைப் பெற்றுக் கொண்டவளின் தலை மாலையை, விடியற் காலத்தில் புறப்பட்டு வருதலால், மனம் தடுமாறி அணிந்து இரண்டு அணியும் கெடாமல் எம் இல்லத்தில் வந்து நின்றாய். இங்ஙனம் நீ நின்றது. எம் மேனி வெம்மையடைவதற்குக் காரணமான காமநோய் மிக, பொன்னால் ஆன மகரக் குழையையுடைய பரத்தையருடன் நீரில் விளையாடுகின்றாய் என்று பிறர் சொல்ல, உன் பொருட்டு உண்டான ஆரவாரத்தைவிடப் பெரியதன்றோ!