பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


வையையாறு, கார்காலம் முதிர்தலால் பூங்கொத்துகள் மலர்ந்த மணக்கும் இதழ்களை உடையவை பன் மலர்களைச் சூடி, புலவர் வாயிற் பாடலைத் தான் பெற்று ஊரைச் சூழ்ந்து வரும். அது பெரிய நிலமடந்தை ஒரு பூமாலையைச் சூடிக் கொண்டிருப்பதைப் போல் விளங்கும். இத்தகைய அவ் வையை யாற்றின் நீர் சூழ்ந்து மதிலைப் போரிடும் பகையே அல்லாமல் பகைவர் போரால் வளைத்துக் கொள்வதைக் சற்றும் அறியாத மதில் சூழ்ந்த நீரையுற்ற மதுரை நகரை உடையவன்.

என் தோழியே! எழிலையுடைய மை பூசப் பெற்ற கண்ணையுடைய பரத்தையர் தம் மாலைகளினால் அடித்த அழகையும், நகத்தாலும் பல்லாலும் உண்டாக்கிய புண்களை யும், அணிகளால் உண்டாக்கப்பட்ட வடுக்களையும் தலைவன் என்னிடம் காட்டி அன்பு இல்லாது வருவான் என்றால், நான் அவன்சிடம் ஊடல் கொள்ள நினைத்திருந்தேன். ஆனால் என்ன? என் போக்கற்ற நெஞ்சம் அவனைக் காணில் தவறு களுடன் கூடிய அவனை நான் கூடுவேன் என்று கூறும். என்ன செய்வேன்?

பக்கம் உயர்ந்த அகன்ற அல்குலையுடைய கொடி போன்ற பரத்தையர் தம் முலைகள் அழுந்திப் பூசிய சந்தனத்தை உடையவனாய், நன் மக்களின் குணம் இல்லாது வருவானா யின், ஊடலாம் என இருந்தேன். நான் கூறுவதைக் கொள்ளாத இந் நெஞ்சம் அவனைப் பார்க்கின் தவறுகளுடன் கூடிய அந் நிலையிலேயே அவனிடம் யான் கூடுவேன் எனச் சொல்லும்.

தோழி! இப்போது புதிதாய்க் கூடிய அழகு கொண்ட பரத்தையரின் பற்கள் அழுந்துகையால் உண்டான சிவந்த வடுக்களை இவன் காட்டி நாணம் இல்லாது வருவானாயின், ஊடல் கொள்ளலாம் என இருந்தேன். ஆனால் பயனில்லை. இந்தத் தனிமையான மனத்தைத் தனக்கு உரியதல்லாத நெஞ்சமானது அவனைக் காணின் அத் தவறுகளுடனேயே அந் நிலையில் என்னை விட்டு நீங்கி அவனிடத்தே செல்லும். இளம்பிறை போன்ற நெற்றியை உடையவளே! நமக்குத் துணையாகாது வஞ்சனை செய்து விட்டு அவனிடத்தில் போகும் நெஞ்சைக் கொண்ட மகளிர்க்குத் தாம் எண்ணியவை