16
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
16. கண்கள் நிறம் மாறின
ஓங்குயூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால் சிறு தொழுமகளிர் அஞ்சனம் பெய்யும் பூக்களுல் ஊரனை உள்ளிப், பூப் போல் உண்கண் பொன் போர்த்தனவே - ஜங் 16 தோழி, “மேலே உயர்ந்த பூவையுடைய நாணல் துளை யுடைய திரண்ட தண்டில், சிறுமை வாழ்க்கையுடைய மகளிர் கருமை இட்டு வைக்கும் பூக்கள் நிறைந்த ஊரனை நினைத்தலால், தலைமகளின் பூப்போன்ற மையுண்ட கண்கள் பொன்போல் பசலை பூத்தன. அகலின், இப்போது தலை மகன் வந்து பெறப் போவது யாது?’ என்று தோழி தூத்ாய் வந்தவர்க்குக் கூறி வாயில் மறுத்தாள்.
17. வருந்துகிறது நெஞ்சு புதல் மிசை நுடங்கும் வேழ வெண் பூ விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன் புதுவோர் மேவலன் ஆகலின், வறிது ஆகின்று, என் மடங் கெழு நெஞ்சே. - ஐங் 17 தலைவி, “தான் இருக்கும் புதரின் மேற்பட நின்று அசை யும் நாணலின் வெண்மையான பூ வானத்தில் பறக்கும் வெண் குருகைப் போல் தோன்றும் ஊரனாகிய தலைவன், அவன் நாள் தோறும் புதியவரான பரத்தையரிடம் விருப்பு உடைய வனாதலால், அதனை அறியாது என் மடங்கெழு நெஞ்சம் அவனை நினைந்து வருந்துகின்றது” என்று கூறினாள்.
18. பிரியேன் என்று பிரிந்தானே
இருஞ் சாய் அன்ன செருந்தியொடு வேழம் கரும்பின் அலமருங் கழனி ஊரன், பொருந்து மலர் அன்ன என் கண் அழப் பிரிந்தனன்அல்லனோ, பிரியலென் என்றே? - ஐங் 18 கரிய கோரையை ஒத்த செருந்தியுடன் நாணல் கரும்பு போல் காற்றினால் சுழன்று அசையும் வயல்களையுடைய ஊரன், முன்னம் வந்து கூடிய போதில், ‘இனிப் பிரியேன்”