170
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
இணர் ததை தண் காவின், இயன்ற நின் குறி வந்தாள் புணர்வினில் புகன்று, ஆங்கே புனலாடப் பண்ணியாய் தருக்கிய பிறவாக, தன் இலள் இவள் என, செருக்கினால் வந்து, ஈங்குச் சொல் உகுத்தீவாயோ? என ஆங்குதருக்கேம் பெரும நின் நல்கல்; விருப்புற்றுத் தாழ்ந்தாய் போல் வந்து, தகவில செய்யாது, சூழ்ந்தவை செய்து, மற்று எம்மையும் உள்ளுவாய்வீழ்ந்தார் விருப்பு அற்றக்கால். - கலி 69 மேலாடைக்குள் வெட்கத்தால் மறைந்து பார்க்கின்ற காதலையுடைய மங்கையுடன், தன் இம்மை மறுமைக்குத் துணையாக ஆகும் வேதம் ஒதும் அந்தணன் தீயை வலமாக வருவான். அவனைப் போன்று மென்மை இறகையுடைய அன்னப் பறவை தன் பெட்டையுடன் கூடி மலர்கள் மலர்ந்த நீர் நிலையில் உள்ள தாமரையின் புதிதாய்க் கட்டவிழ்ந்த தாதுடைய தனியான மலரின் புறத்தே சேர்ந்து பெருமை விளங்கத் திரியும் புனல் பொருந்திய நல்ல ஊரை உடையவனே!
தேர்ந்தெடுத்த பரலையுடைய சிலம்பு ஒலிக்கத் தெருவில் வந்து தாக்கணங்கைப் போல் அடித்து, உன் நெஞ்சை வயப்படுத்திக் கொண்டு பின்பு கைவிட்டவள் பரத்தை. அவளை உன் வருத்தத்தைச் சொல்லி அழைத்துக் கொள்ள எண்ணி வந்த செயல் வேறொன்றாயிருக்க, இவள் அறிய மாட்டாள் என்று எண்ணி இங்குப் பணிந்தவன் போல் காட்டிப் பயன் இல்லாதவற்றைக் கூறுகின்றாய். அஃது உன்னை வருத்தாதோ? என்றாள் காமக்கிழத்தி.
பரத்தையரின் நெஞ்சம் வன்மையுடையது என்று அறியாது, பாகனைத் தேரோடும் அவளிடம் போகவிட்டு, அவள் உன்னை விருந்தாக ஏற்க வருவாள் என எண்ணிய நீ, அவள் வாராதால், உன் நெஞ்சத்தில் உள்ளவை வேறா யிருக்க, ‘இவள் நிறை என்ற குணமுடையவள் அல்லள் என்று எண்ணிப் பொய் வன்மையால் இங்கு வந்து உன் ஊராண் மையால் என்னை வருத்துவாயோ? அஃது உன்னை வருத் தாதோ? எனக் காமக்கிழத்தி உரைத்தாள்.