தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
171
மலர்க்கொத்துகள் நெருங்கிய சோலையில் நீ செய்த குறியிடத்தில் வந்தவளைப் புணர்ச்சியில் நலம் பாராட்டி அப்போதே உடன் புனலாடும்படி பண்ணினாய், நீ! நின் நெஞ்சில் நிகழ்பவை வேறாக இருக்க, ‘இவள் தனக்கென ஒரு நெஞ்சு உடையவள் அல்லள்! என்று அவளைப் பற்றிக் கூறி உள்ளத்தின் செருக்காலே இவ்விடத்தே வந்து நின்றனை. பரத்தையர்க்குக் கூறம் பயனுடைய இத்தகைய சொற்களைப் பாழாக என்னிடத்தில் கூறி வீணாக்கலாமோ? அது நின்னை வருத்தாதோ? எனக் காமத்கிழத்தி உரைத்தாள்.
பெரும! உன் அளியினால் நாங்கள் மனச் செருக்குக் கொள்ள மாட்டோம்! எம்மிடத்து விரும்பிக் குறைந்தாய் போல் வந்து நின்று தகுதியில்லாதவற்றைச் செய்ய வேண்டா. நி விரும்பியவரிடத்து நுகரக் கருதியவற்றை நுகர்ந்து முடித்து விருப்பம் இல்லாத போது என்னையும் நினைப்பாய் என்று ஊடல் நீங்கும் காமக்கிழத்தி உரைத்தாள்.
227. பாணன் வருகையே எமக்கு வருத்தம் மணி நிற மலர்ப் பொய்கை, மகிழ்ந்து ஆடும் அன்னம் தன் அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தென, கதுமென, காணாது, கலங்கி, அம் மடப்பெடை மதி நிழல் நீருள் கண்டு, அது என உவந்து ஒடி, துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு, மிக நாணி, பல் மலரிடைப் புகூஉம் பழனம் சேர் ஊர! கேள்:
நலம் நீப்பத் துறந்து எம்மை, நல்காய் நீ விடுதலின், பல நாளும் படாத கண், பாயல் கொண்டு இயைபவால்; துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட, மண மனைத் ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே. அகல நீ துறத்தலின் அழுது ஒவா உண்கண் எம் புதல்வனை மெய் தீண்ட, பொருந்துதல் இயைபவால்; நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர்த் தந்து நின் தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே. வாராய் நீ துறத்தலின், வருந்திய எமக்கு, ஆங்கே நீர் இதழ் புலராக் கண் இமை கூம்ப இயைபவால்,