தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
173
நீ இங்கு வரவில்லை. ஆதலால் யாம் உறக்கம் இழந்தோம். அதனால் வருந்திய எமக்கு நீர் விழும் இதழ் போல் நீர் சிந்துதலை ஒழியாத கண்கள் படுக்கையில் இமை பொருந்துத லும் கூடும். அதனை ஒத்த இழைகளையுடைய பரத்தை யரைத் தமக்கு அமைக்கப்பட்ட இல்லத்தில் கொண்டு வருகையால் பிறந்த உன் தேரிலே பூண்ட குதிரையில் கட்டிய தெளிந்த மணியோசை வந்து போக்கும்; அதுவே எங்கள் குறை.
நான்கு படைகளில் குறைவுபட்ட மதிலுக்குள் இருப்ப வனின் செவியில் மதிலை முற்றியிருப்பவனின் பள்ளியெழுச்சி முர்சினைப் போல் மேலே கூறப்பட்டவை எல்லாம் எமது உறக்கத்தைப் போக்குக. பரத்தியரின் இல்லத்தில் மீட்டிய யாழைத் தழுவிக் கொண்டு தூதாகத் திரிவது அன்றிப் பாட்டினை நன்கு கல்லாத வாயையுடைய பாணன் நம் வீட் டில் வாராதவிடத்து, அவனது வருகையே எமக்கு வருத்தம் என்று நெருங்கிச் சொன்னாள் தோழி, தலைவனிடம்.
228. காமக் கிழத்தி பேசுகிறாள் விரிசுதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தர, புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி, வளி வண்டு வாய் சூழும் வளம் கெடு பொய்கையுள்துணி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார, இனிது அமர் காதலன் இறைஞ்சித் தன் அடி சேர்பு, நனி விரைந்து அளித்தலின், நகுபவள் முகம் போலபனி ஒரு திறம் வார, பாசடைத் தாமரைத் தனி மலர் தளை விடுஉம் தண் துறை நல் ஊர! ஒரு நீ பிறர் இல்லை, அவன் பெண்டிர் என உரைத்து, தேரொடு த்ேற்றிய பாகன் வந்தியான்கொல்ஒர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் பாரித்துப் புணர்ந்த நின் பரத்தைமை காணிய? ‘மடுத்த அவன் புகுவழி மறையேன் என்று யாழொடும் எடுத்துச் சூள் பல உற்ற பாணன் வந்தியான்கொல்அடுத்துத் தன் பொய் உண்டார்ப்