பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

175


மறையாமல் கிடந்த நின் பரத்தமையைக் காண்பதற்கு இங்கு வரமாட்டானோ?

அப் பரத்தையர் உடன்பாடில்லாமல் தானே போகு மிடத்து உன்னை மறவேன் என்று சொல்லி யாழாகிய தெய்வத்தோடு பிற தெய்வங்களையும் கூட்டிப் பல் சூள் கூறுபவன் பாணன். அவன்,"இவன் செய்தி பொய்’ என்று அறிந்தும், மருண்டு அப் பொய்கையைப் பல முறையும் நுகர்ந்தவர்களைக் கூடிய உன் கழுத்தில் அள்ளிக் கொள்வது போன்று மறையாமற் கிடக்கின்ற வளையல் ஏற்பட்ட தழும்பைக் காண்பதற்கு வாரானோ!

உன் தீமைகளை உணர்ந்துள்ள எமக்கு, நீ எங்களைப் பிரிந்தாய் என்று பிறர் சொல்லக் கேட்டிருந்து, நீ பிழைகளை உணராமல் உன் நற்குணங்கள் உள்ளன எனக் கொண்டாடு பவன் நின் தோழன். அவன் திரண்ட காதணியை அணிந்த மகளிரின் புணர்ச்சியால் குலைந்து விழுந்த கூந்தலாகிய அணையிலே உறங்குகையில் தெய்வம் போல் மணக்கும் நின் அலர்ந்த மார்பைக் காண்பதற்கு வாரானோ?

இவ்வாறு நின் அன்பு நீங்காத முயக்கத்தை என்றும் பெறும் பரத்தையரை வெறுப்பவர் யார்? நீ ஓர் ஆண்டுக்கு ஒரு முறை வரும் வரவு, எமக்கு, மழைக்கு ஆசைப்பட்டுத் தோன்றின நெற்கதிர்க்கு அப் பருவத்தில் பெய்யாமல் சிறு துவலையைப் பெய்தமைபோல் மிக்க வருத்தத்தை தரும். எனவே, நீ வரும் நாளைப் போல் யாங்கள் ஆற்றியிருப்போம். நீ வருந்தாது அந்தப் பரத்தையர் மனைக்கே செல்வாயாக! என்று பரத்தையர் உறவால் தலைவனிடம் ஊடிக் கூடிய தலைவி கூறினாள்.

229. இந் நோய் உழத்தல் இழிந்ததோ இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள், துணை புணர் அன்னத்தின் தூவி மேல் அணை அசைஇ, சேடு இயல் வள்ளத்துப் பெய்த பால் சில காட்டி, ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல, புது நீர புதல், ஒற்றப்புணர் திரைப்பிதிர் மல்க, மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி,