தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 1R7
தீண்டிட அது மலரும். அது பாலைக் கிளிக்கு ஊட்டுப வளின் முகம்போல் விளங்கும். இத்தகைய வயல் பொருந்திய நல்ல ஊரனே!
நம்மைப் போற்றவில்லை என்று சினங்கொண்ட பரத்தை யர், தம்மைப் போற்றுதற்காக நகத்தால் செய்த வடுக் காரணமாக அவர்க்குப் பின் உள்ள நாளிலே உன் தோளைச் சேர்ந்த பரத்தையருடைய பற்கள் அழுந்திய உதட்டை, நீ காவலைப் பூண்ட பரத்தையரைப் புணருந்தோறும் யாம் அழும்படி உன்னைப் பண்ணால் மகிழச் செய்யும் பாணன் எனக்குக் காட்டு என்று சொன்னானா?
உன்னைக் கூடிய பரத்தை மகளிர், நீராடுவதற்குத் தெப்பமான உன் மார்பிலே அப் புனலாட்டைப் பெறாமல் ஊடிய மகளிர் சாதிலிங்கம் இருந்த சிமிழோடு அதனை எறிய, அதனால் விளக்கம் உடைய சாதிலிங்கத்தை, உன்னைக் கூடற்குரிய பரத்தையரைத் தேடித் துரதாய்த் திரிந்து, நீர்த் துறைக்குச் செல்லாது, ஊரில் உள்ளவரின் ஆடைகளைச் சேர்த் துக் கொண்டு, அவற்றை வெளுக்காமல் திரியும் நின்னுடைய வண்ணாத்தி எனக்குக் காட்டுவாயாக எனக் கூறினாளா?
புணர்ச்சியால் மகிழ்ச்சி அடைபவரது மாலை முயக்கத் தால் மென்மை அடைவதற்குக் காரணமான விடிவின் மேல் அதன் பின்பு நின் குறியிடம் பெற்றவரின் மயிரைப் பெற்ற முடியை நீ வகிர்ந்து அழகுப்டுத்தி முடிப்பதனால் விழுந்து கிடந்த பூந்துகளை உன் புகழைக் கேட்க வேண்டாத எங்கள் இல்லத்தில், ஒரு பயனில்லாமல் புகழ்ந்து பேசும் இயல்புடைய அந்தணன் அவளைக் காணும்படி செய் என்று கூறினானா?
முன்னம் நீ எம்மை முயங்கியதால் யாமும் உன்னை முயங்கினோம். இக் காலத்தில் நீ செய்யும் குறைகளை அறிந்து அதனால் அழிந்து கெடும் மனம் உடையவர் ஆனோம். அதன் மேல் வருத்தத்தில் தங்கும்படியாய் நீ செய்துவிட்ட இக் குறைகளைக் குறையென்று நினைக்காமல் உன்னைக் கண்ட அளவில் நெஞ்சழிந்து உன்னைப் பேணிக் கொள்வதால் இக் காமநோயிலே தங்குதல் எமக்குத் தாழ்ந்த ஒரு செயலோ? இஃது இழிந்தன்று என்று ஊடலை உதறிச் சொன்னாள் இல்லக்கிழத்தி.