தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
17
என்று கூறிப் பின்னர், அழகிய மலர் போன்ற என் கண்கள் கலுழுமாறு பிரிந்தானாகலின், அவன் பொருட்டு, நீவிர் வந்து வாயிலை வேண்டுவது என்ன?” எனத் தலைவி தூதர் களைப் பார்த்து வினவினாள்.
19. ஊரன் ஆகலின் வருந்துகிறேன்
எக்கர் மாஅத்துப் புதுப் பூம் பெருஞ் சினை,
புணர்ந்தோர் மெய்ம் மணங் கமழும் தண் பொழில்,
வேழ வெண் பூ வெள் உளை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி,
மாரி மலரில் கண் பனி உகுமே. - ஐங் 19
தலைவி, ‘மணல் பரவிய எக்கரில் நின்ற மாமரத்தின் புதியவாய் அரும்பிப் பூத்த பூக்களையுடைய பெரிய கொம்பு, வதுவையிற் கூடிய மகளிரின் மெய்ம்மணம் கமழும் குளிர்ந்த சோலையில், நாணல் வெண்பூவின் இதழாகிய தலை அப் பூக்களைத் துடைத்து அழிக்கும். ஊரன் தலைவன் ஆதலால் என் கண்கள் கலக்கத்தை அடைந்து மழையால் நனைந்த குவளைமலர் போல் நீரைச் சொரிகின்றன” என்று தோழி யிடம் இயம்பினாள்.
20. வளை நெகிழ்ந்திடுதே
அறு சில் கால அஞ்சிறைத் தும்பி நூற்றிதழ்த் தாமரைப் பூச் சினை சீக்கும், காம்பு கண்டன்ன தூம்புடை, வேழத்துத் துறை நணரி ஊரனை உள்ளி, என் இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஒடும்மே. - ஐங் 20 தலைவி, “ஆறு கால்களையும் அழகிய இறகையும் உடைய தும்பி நூறான பல இதழ்களை உடைய தாமரை மலரில் ஈன்றிருக்கும் சினைகளை அழிக்கும் மூங்கில் போன்று உள்ளே துளையையுடைய நாணல் செறிந்த துறையை அருகில் உடைய ஊரனை நினைந்தேன். நினைந்ததால் இறையும் அழகும் ஒளியும் உடைய என் வளைகள் நில்லாமல் நெகிழ்ந்து ஒடுகின்றன” என்று உரைத்தாள்.