180
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
231. பித்துடையது நின் தேர்! பொய்கைப் பூப் புதிது உண்ட வரி வண்டு கழிப் பூத்த நெய்தல் தாது அமர்ந்து ஆடி, பாசடைச் சேப்பினுள், செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை, மை தபு, கிளர் கொட்டை மாண் பதிப் படர்தரூஉம் கொய் குழை அகை காஞ்சித் துறை அணி நல் ஊர! அன்பு இலன், அறன் இலன், எனப்படான் என ஏத்தி, நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான். நஞ்சுஉயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு அளி இன்மை கண்டும், நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார். முன்பகல் தலைக்கூடி, நன்பகல் அவள் நீத்து, பின்பகல் பிறர்த் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய். என ஆங்கு - - ‘கிண்மணி மணித் தாரோடு ஒலித்து ஆர்ப்ப, ஒண் தொடிப் பேர் அமர்க் கண்ணார்க்கும் படு வலை இது என, ஊரவர் உடன் நகத் திரிதரும் தேர் ஏமுற்றன்று, நின்னினும் பெரிதே. - கலி 74 வரிகளையுடைய வண்டு பொய்கையில் மலர்ந்துள்ள பூவின் தேனை உண்டது. பின் கழியில் மலர்ந்த நெய்தல் மலரின் தேனை உள்ளம் பொருந்தி உண்டது. வயலில் பசிய இலைகளையுடைய சேப்பங்கிழக்குச் செடியினிடையே கையால் செய்து வைத்தாற் போன்று பூத்த கருகிய இதழ் களை உடைய தாமரைப் பூவினது கொட்டையான பதி யிடத்தில் அவ் வண்டு மீண்டுவரும். இத்தகைய இயல்புடைய மகளிர் கொய்யும் தழை தளிர்க்கின்ற காஞ்சி மரத்தை யுடைய துறையையுடைய நல்ல ஊரனே!
அவன் அன்பில்லாதவன் என்றும் அறம் உடையவன் அல்லன் என்றும் உன்னால் சொல்லப்படாதவன் என்று இப்படி நின்னைப் புகழ்ந்துன் புகழ் பலவற்றையும் பாடிக் காட்டுகின்ற பாணனும் பித்து உடையவன் ஆனான்.
நஞ்சானது தன்னை உண்டவரின் உயிரைப் போக்கும் என அறிந்திருந்தும் அதனை உண்டதைப் போன்று உன்