182
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
‘வாடிய பூவொடு வாரால், எம் மனை என ஊடியிருப்பேனாயின், நீடாது, அச்சு ஆறாக உணரிய வருபவன் பொய்ச் சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல். பகல் ஆண்டு அல்கினை, பரத்த என்று யான் இகலியிருப்பேனாயின், தான் தன் முதல்வன் பெரும் பெயர் முறையுளிப் பெற்ற புதல்வற் புல்லிப் பொய்த் துயில் துஞ்சும். ஆங்க - விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச் சூள் அஞ்சவும், அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும், ஆங்கு அவிந்து ஒழியும், என் புலவி தாங்காது, அவ்அவ் இடத்தான் அவைஅவை காணபூங் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும் மாய மகிழ்நன் பரத்தைமை நோவென், தோழி! கடன் நமக்கு எனவே. - கலி 75 நீர் நிறைந்த கழனியில் வளர்ந்த ஒத்த இதழையுடைய நெய்தல் மலருடன் ஆம்பலின் மலர்களைப் பறிப்பதற்காகச் சிலம்பு முதலியவை ஒலிக்க ஒடுவர் விளையாட்டு மகளிர். அவர்களின்அணி செய்யும் ஆரவாரத்துக்கு அஞ்சி எழுந்து ஆரல் மீனை உண்ணும் அழகிய சிறகையுடைய பறவைக் கூட்டம் உயர்ந்த மரத்தின் கொம்பில் போய் அமரும். அங்கே இருந்து போரிடும் கண்களையுடைய மகளிர் தம்மை வருத்திய அந்தத் துன்பத்தை அம் மகளிரின் சுற்றத்தவர்க்கு உரைப்பவை போல் பல குரலால் பல முறையும் சொல்லும் இத்தகைய இயல்புடைய உயர்ந்த போர்களால் உண்டாகிய நல்ல ஆரவாரத்தையுடைய ஊரை உடையவன். அவன் புதிய பரத்தையரை மணம் செய்தலை எக் காலமும் விரும்புவானா யின், அதற்கு ஏற்றபடி நாள்களும் மணத்துக்குரிய நாள் களாக இருப்பின், தோழி, அந்த ஒழுக்கத்திற்கு நான் வருந்துவேன். நீ அதற்கு ஒரு காலமும் வருந்தாய் எனக் கூறி என்னை நோக்கி, “வருத்தம் அடைபவளே, இனி அவன் செய்தியை உன் மனம் தெளியுமாறு கூறுவேன்; கேட்பாயாக!