பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

,

233. நாம் இனி செயற்பாலது? புனைஇழை நோக்கியும், புனல் ஆடப்புறம் சூழ்ந்தும், அணி வரிதைஇயும், நம் இல் வந்து வணங்கியும், நினையுயு வருந்தும் இந் நெடுந்தகை திறத்து, இவ் ஊர் இணையள் என்று எடுத்து ஒதற்கு அணையையோ, நீ என வினவுதியாயின், விளங்கிழாய் கேள், இனி:

‘செவ்விரல் சிவப்பு ஊரக் சேண்சென்றாய் என்று, அவன் பெளவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்தற்கோகெளவை நோற் உற்றவர் காணாது கடுத்த சொல் ஒவ்வா’ என்று உணராய், நீ ஒரு நிலையே உரைத்ததை?

ஒடுங்கி, யாம் புகல் ஒல்லேம் பெயர்தர, அவன் கண்டு, நெடுங் கய மலர் வாங்கி, நெறித்துத் தந்தனைத்தற்கோவிடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய்யாகக் கடிந்ததும் இலையாய், நீ கழறிய வந்ததை.

‘வரி தேற்றாய், நீ என, வணங்கு இறை அவன் பற்றி, தெரி வேய்த் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தனைத்தற்கோ

புரிபு நம் ஆயத்தார் பொய்யாக எடுத்த சொல் உரிது என உணராய், நீ உலமந்தாய் போன்றதை? என ஆங்கு அரிது இனி, ஆயிழாய் அது தேற்றல்; புரிபு ஒருங்கு, அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று, ஈங்கே, தான் நயந்து இருந்தது இவ்வூர் ஆயின், எவன்கொலோநாம் செயற்பாலது, இனி? - கலி 76 நன்கு செய்யப்பட்ட அணிகளைக் கிடக்கும் முறையில் கிடக்கும்படி திருத்தியும், நான் நீரில் ஆட நமக்கு ஒரு துன்பம் வாராமல் வெளியில் சூழ்ந்தும் திரிந்தும், அழகிய தொய்யில் எழுதியும், நான் இயற்றிய சிற்றிலில் வந்து ஏவல் தொழில் செய்தும், நம் கூட்டத்தை நினைந்து வருந்துபவன் தலைவன். இந்தப் பெரிய தகுதியுடையவனிடம் இவள் கூட்டத்தை உடையவள் என்று இந்த ஊரில் உள்ளவர் பல முறையும்