பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

187


மிகவும் இணைந்த அந்த முகைகளின் மேலே தம் உள்ளிதழ் நீரைத் துளிக்கும். இத்தகைய இயல்புடைய ஊரனே, கேட்

Lorris isso: -

‘உண்டு எனக் கூற இயலாத என் உயிர் அவ்வளவில் நில்லாது இறப்பை உணர்ந்தும் நின் மனைவி என்று மற்றவர் உரைக்கும் பழி நீங்கப் பெறின், குளிர்ந்த தளிரில் விழுந்து அழகு பொலிவு பெற்ற தாதினைப் போல் எழிலையுடைய மாமை நிறமும் சுணங்கும் என்னிடமிருந்த நீங்குமாறு பெற்றுக் கொண்டு பின்பு ஒருகாலும் தாராமல் விட்ட அழகைத் திரும்பவும் பெற விரும்பேன். அதனால் என்ன? நின் மனைவி என்ற பெயர் போகாது ஆயிற்றே!

கண்கள் மலரின் அழகையுடைய வனப்பு போகும்படி யாகப் பொன்னைப்போல் பசலை கொண்டன உன்னால் வருத்தம் அடைந்த பரத்தையர் செய்யும் கொடுமைகளை என்னிடம் வந்து வெறுத்துக் கூறாமையை நான் பெற்றால், இயற்கை நலத்தையும் இழந்த அக் கண் உறக்கம் பெறுவதை விரும்பேன் ஆயினும் என்?

அவ்வாறு என்னை இகழ்ந்து கூறுதலைக் கைவிட மாட்டாரே!

உன் பாணன் வருத்தம் உண்டாக்கும் தன்மையுடைய பண்ணை இசைத்தபடி எம் மனையில் வந்து நீ போயிருக்கும் பரத்தையர் இல்லத் தைப்பற்றி என்னைக் கேட்ட வண்ணம் வாராதிருத்தலை யான் பெற்றேனானால், தூய்மை செய்யப் பெற்ற நீல மணியை நீ நிகராகமாட்டாய் என்று இகழும் கரிய கூந்தல் பூவணிந்து வண்டுகள் ஆரவாரிக்கும் அழகைப் பெற்றிட நான் விரும்ப மாட்டேன்; அதனால் என்ன? அவன் அங்ஙனம் வினவி வருதலைக் கைவிட மாட்டானே!

உன்னைக் கண்டால் என்னை உன்னிடத்தே செலுத்தித் தானும் உன்னிடத்தே தங்கி வருந்தும் நெஞ்சு என்று சொல்லப்படும் உடன் வாழும் உட்பகையை உடையவர்க்கு, முன்பு எம்மை உன்மேல் வீழ்வித்த உன்மார்பைக் கூட மாட்டேன் என்று எண்ணும் நிறை என்ற குணத்தை அடைவது எளியதோ! அஃது அரிதாகும் எனத் தலைவி, தலைவனிடம் சொல்லி ஊடல் நீங்கினாள்.