பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

நண்டு போல் செயல் 21. கண்நிறம் மாறல் ஏன்? முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப் புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும் தண் துறை ஊரன் தெளிப்பவும், உண்கண் பசப்பது எவன்கொல் - அன்னாய்! - ஜங் 21 தோழி, “அன்னையே! நீர் முள்ளிச் செடிகள் நீண்ட வளர்ந்திருக்கும் பழைய நீர்மிக்க அடைகரையில் புள்ளிகளை யுடைய நண்டு அந்த நீரில் உள்ள ஆம்பல் தண்டை அறுக்கும் குளிர்ந்த துறையை உடையவன் நம் தலைவன். அவன், நாம் தெளியும்படி, ‘இனி எனக்குப் புறத்தொழுக்கம் இல்லை!” என இயம்பினன். அங்ஙனமாகவும் அதைத் தெளி யாது. மையினைப் பெற்ற நின் கண்கள் பசந்து வேறுபடுவது ஏன்? கூறுவாய்!” எனத் தலைவியை நோக்கி வினவினாள்.

22. நின்னை பிரியேன் எதற்கு? அள்ளல் ஆடிய புள்ளிக் களவன் முள்ளி வேர் அளைச் செல்லும் ஊரன் நல்ல சொல்லி மணந்து, இனி நீயேன் என்றது எவன்கொல் - அன்னாய்? - ஐங் 22 தலைவி, “தோழியே! சேறு படிந்த புள்ளிகளையுடைய நண்டானது முள்ளியின் வேரில் அமைந்துள்ள வளையில் புகும் ஊரன் களவுக் காலத்தில் நன்மை தரும் சொற்களைச் சொல்லி மணந்தான். அத்தகைய தலைவன், இக் கற்புக் காலத்தில் நின்னைப் பிரியேன் என்று கூறுவதற்குக் கருத்து யாதோ? கூறுக’ என்றாள்.

23. மயங்கி நோய் செய்வது ஏன்? முள்ளி வேர் அளைக் களவன் ஆட்டிப், பூக் குற்று, எய்திய புனல் அணி ஊரன் தேற்றஞ்செய்து நப்புணர்ந்து, இனித் தாக்கு அணங்கு ஆவது எவன்கொல் - அன்னாய்?

- ஐங் 23