190
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
போல், யான் சென்றேனாயின் செருக்கிச் செல்லாமல் வருத்தின் கெடும் என்று நீ நினைத்திருக்கும் தன்மையோ!
உம் பரத்தையர் தன்மையால் பலரும் வியக்கத்தக்கவை உமக்குப் பொருந்தின உம்மை விரும்புபவரும் நீவிர் விரும்பு பவரும் ஆகிய பரத்தையரும் உமக்கு வேறுபடும் படியாய் இங்கு நில்லாமல் அப் பரத்தையர் மனைக்கே செல்வீராக தன் இயல்பால் மலராது கையால் வலிய மலர்த்துவதால் அரும்பு அலர்ந்தது போன்று இனிமையற்ற முயக்கத்தில் எமக்குக் குளிர்ந்த பனிக்காலம் அப்படிக் கொடியதா யிருக்க நீவிர் இல்லாமல் தங்குதல் நல்ல தன்மையில்லையோ அது தன்மையுடையதோ என்று உடல் நீங்கும் தலைவி சொன்னாள்
236. போ பரத்தையரிடமே
புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன் வள் இதழ் உற நீடி வயங்கிய ஒரு கதிர் அவை புகழ் அரங்கின்மேல் ஆடுவாள் அணி நுதல் வகை பெறச் செரீஇய வயந்தகம் போல், தோன்றும் தகை பெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்: அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி; மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால், தோய்ந்தாரை அறிகுவேன், யான் என, கமழும் நின் சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ? புல்லல் எம் புதல்வனை; அகல் நின் மார்பில் பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால், மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில் பூணினால் குறி கொண்டாள் புலக்குவாள் அல்லளோ? கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி; நின் சென்னி வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால், நண்ணியார்க் காட்டுவது இது என, கமழும் நின் கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ? என ஆங்கு