192
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
மாலையால் பிறர் முயக்கத்தை அறிந்து கொள்பவள் பரத்தை சினம் கொள்வாள் அல்லளோ?
மலர் போலும் கண்ணையுடைய எம் மகனைப் பல பொய்களை சொல்லிப் பாராட்டி அவனை விட்டுப் போகா மல் பரத்தையர் குறிக்கொண்ட நிலைமையைக் கடவாமல் எம் வீட்டின் வாயிலில் நில்லாதே. நின்றால் அவன் அணியை அழிப்பவன் ஒருவனாய் உள்ளான் ஆதலால் அம் மகனை இங்கே தந்து விட்டு அந்தப் பரத்தையர் சேரியில் உள்ள அப் பரத்தையரிடமே செல்வாயாக! என்று ஊடி தலைவி சினத்துடன் கூறினாள்.
237. இனியதும் இன்னாததும் நயம் தலை மாறுவார் மாறுக; மாறா, கயந் தலை மின்னும் கதிர் விடு முக் காழ், பயந்த எம் கண் ஆர யான் காண நல்கிதிகழ் ஒளி முத்து அங்கு அரும்பாகத் தைஇப் பவழம் புனைந்த பருதி சுமப்ப, கவழம் அறியா நின் கை புனை வேழம் புரி புனை பூங் கயிற்றின் பைபய வாங்கி, அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து, அங்கே வருக! எம் பாக மகன்! கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும் தளர் நடை காண்டல் இனிது; மற்று, இன்னாதே ‘உளம் என்னா நுந்தைமாட்டு எவ்வம் உழப்பார் வளை நெகிழ்பு யான் காணுங்கால்.
ஐய! காமரு நோக்கினை, அத்தத்தா என்னும் நின் தே மொழி கேட்டல் இனிது; மற்று, இன்னாதே உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார் எவ்வ நோய் யாம் காணுங்கால். ஐய! ‘திங்கட் குழவி, வருக என, யான் நின்னை அம்புலி காட்டல் இனிது; இன்னாதே நல்காது நுந்தை புறம் மாறப்பட்டவர் அல்குல் வரி யாம் காணுங்கால்.