196
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
டாடிக் கற்பிக்கக் கற்பிக்க நீ அவர்களிடம் திருத்தமாய்க் கற்ற சொற்களை யாம் கேட்கும்படி கூறு வாயாக. இது மகனை நோக்கித் தலைவி கூறியது. அடுத்தது தோழியை நோக்கிச் சொன்னது. ஒளியுடைய அணிமணி அணிந்தவளே! நம்மிடம் பழக்கமுடைய பாணன் ‘நீ இப்போது எங்குள்ளாய்? என்று வினவப் பரத்தையர் சொல்லில் மனம் பொருந்தி நமக்கு அயலவனாய் நின்று, வாயால் கூறும் சொல் சிதைந்து, ஏனாதிப் பாடியத்தேம்’ என்று கூறிய தன்மை போல், நமது நோயைத் தணித்தற்குக் காரணமான மருந்து என்று நாம் பாராட்ட மாறாமல் ‘அத்தா, அத்தா’ என்று அடுத்து அடுத்துக் கூறுபவனை அவனது தவற்றைக் கருதாது நம் மூங்கில் போன்ற தோளிலே ஏற்றிக் கொண்ட பின்பும் இவனது வாயினின்று போகாமல் உள்ளான்! இதற்குக் காரணம் என்ன? தலைவி தன் மகனைப் பார்த்து நீ கற்றவற்றுள் ஒன்றைக் கூறு என்று வினவினாள். அவள் கேட்ட அப்போது தலைவன் தலைவிக்குப் பின்புறமாய் வந்தான். தன் வருகையைத் தலைவிக்குத் தெரிவிக்க வேண்டா எனச் சைகை செய்தான் தோழியர்க்கு. அதனால் அவன் வருகையை அறியாத தலைவி, தோழியை நோக்கி நாம் இவன் கற்றதைச் சொல் என்றால் இவன் தந்தையையே சொல்லி வருத்துகிறான் என்றாள் தந்தையைப் பார்த்துவிட்டதால் மகன் ‘அத்தா, அத்தா என்று அழைத்தான்.
அவ்வாறு வினவிய தலைவி, தோழியின் குறிப்பாலும், மகன் ‘அத்தா அத்தா என்று அழைத்ததாலும், தலைவன் வந்துவிட்டான் என்பதை உணர்ந்து, “பகைவரை எண்ணி அவரிடத்தே படைக்கலங்களைச் சேரவிடுதற்குக் கள்வர் வருதல் போன்று, இங்கு எம்மை இகழ்வதற்காகவே வந்தார். நம் மீது அன்பு கொண்டு வந்தவர் அல்லர்’ எனத் தலைவன் கேட்பத் தோழியை நோக்கிச் சொன்னாள்.
அதைக் கேட்ட தலைவன் மதிலையுடைய ஊரில் காவலர் கள்வரைக் கண்ணால் காணாதிருக்கவும், அவரால் வரும் குற்றத்தை உணர்ந்து இங்குக் கள்வரைக் கண்டோம் என்று கூறுபவரைப் போன்று முன் நில்லாது ஒரு பக்கமாகச் சென்று நின்று, யான் செய்யாத குற்றங்களைக் கூறிச் சினம் கொள்ள