பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

197


வேண்டா. நின் ஆணையின்படி நடக்காது மீறி நடப்பவர் இங்கு யார் இருக்கின்றார்? என்றான் தலைவன்.

அதைக் கேட்ட தலைவி, நடுக்கம் அற்ற வஞ்சனையால் வருத்தி என் மகள் மேல் வேட்கை உண்டாக அதை நினை யாமல் வந்தாய். அணியையுடைய முதிர்ந்த முலைகளால் நின் மார்போடு தழுவிய பரத்தை முடியினின்றும் உதிர்ந்த பூந்து கள் சிந்திக் கிடந்த உன் ஆடையில் உள்ளதைப் போக்கவே காற்றின் எதிரே நின்றாய் இவ்வாறு நில்லாதே போ! என்றாள்.

அதைக் கேட்ட தலைவன், “ஏடி! நான் தீங்கற்றவன் என்று குள் உரைத்தேன் இச் சூளினையும் மீறி எம்மிடத்துச் சிறிதும் சினந்த நிலையினின்று மீட்பு இல்லை என்றால், கன்றைக் கட்டின இடத்தில் கெடாத விருப்புடனே போகும் பசுவைப் போல் நாம் இனி நம்மிடம் வரும்படி மேன்மை யுடைய என் தந்தையின் பெயர் கொண்ட இம் மகனை யான் எடுத்துக் கொள்வேன் என்றான்.

239. இனி வெளிச் செல்லல் முடிந்தது! ஞாலம் வறம் தீரப் பெய்ய, குணக்கு ஏர்பு, காலத்தில் தோன்றிய கொண்மூப் போல், எம் முலை பாலொடு வீங்கத் தவ நெடிதாயினை புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு புக்க வழி எல்லாம் கூறு. கூறுவேன்; மேயாயே போல வினவி, வழிமுறைக் காயாமை வேண்டுவல், யான்.

காயேம்

மடக் குறு மாக்களோடு ஒரை அயரும் அடக்கம் இல் போழ்தின் கண் தந்தை காமுற்ற தொடக்கத்துத் தாயுழைப்புக்காற்கு, அவளும் மருப்புப் பூண் கையுறையாக அணிந்து பெருமான், நகைமுகம் காட்டு என்பாள் கண்ணிர் சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன; மற்றும், வழிமுறைத் தாயுழைப்புக்காற்கு, அவளும் மயங்கு நோய் தாக்கி, மகன் எதிர் வந்து