பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

199


தாயிடத்துச் சென்றான். அங்ஙனம் சென்றவனுக்கு அவளும் எருது இலச்சினையை கைக்காணிக்கையாய் இட்டாள். இட்டுப் பெரியோய்! நின் சிரிப்புடைய முகத்தை நான் முத்தமிடுதற்குக் காட்டுவாயாக’ என்றாள். அவளுடைய கண்ணிர் துளிகளோ முத்து வடங்கள் அறுந்து முத்துகள் கழன்று விழுவதைப் போன்று விளங்கின.

பின்பு அவளுக்கு அடுத்து வந்த தாயிடம் அவன் சென்றான். அங்ஙனம் சென்றவனுக்கு அவளும் மனம் மயங்கு தற்குக் காரணமான காமநோயைப் பொறுத்துக் கொண்டு எதிர் வந்து தன் மகனைத் தழுவிக் கொண்டாள். முத்தம் தந்தாள். இவனை அவள் பார்த்துத் தலைவன் தன்னைக் கைவிட்ட தன்மையை நினைந்து ‘உனக்கு யாங்கள் தாயாகும் முறைமை! எம்மை அவன் நீங்கின.பின் யாங்கள் இனி எம் முறை ஆவோம்?’ என்று கூறினாள். இவனுக்கு அழகு மிகும்படி இவனது வடிவு தாங்கும்படி பிள்ளைகளுக்குப் பூட்டக்கூடிய அணிகளை அணிந்தாள். அப்படி அணிகின்ற பொழுதே, மகளிரின் கண்கள் பசலை கொள்ளும்படி அவர் களுக்குத் துன்பத்தைத் தரும் நின் தந்தையின் பரத்தமைக் குணம் ஒன்றையும் நீ கொள்ளாதே’ என்றாள். அவ்வாறு உரைத்தவளுக்கு இனிதாகச் சில மறுமொழிகளை மகன் கூறினான். பின் நம் போன்ற தலைமைத் தன்மை கொண்ட நம்முடன் சினம் கொண்டிருக்கும் புதியவளின் இல்லத்துக்குப் போனான்” என்று தோழியுரைத்தாள்

அதைக் கேட்ட தலைவி, “ஏடா! நான் வருந்தி நோய் மிகுதிப்பட உன் தந்தையை எந்நாளும் தான் நினைத்த ஒன்றைப் பருந்து எடுத்துக் கொண்டாற்போல் நினைக் கொண்டு போவாள். கைக் கொண்ட அப்போதே தொடியும் நகமும் அவை போன்ற பிறவும் தனக்குப் படைக்கலமாய்க் கொண்டு உன் தந்தையின் மார்பிலும் பிற இடங்களிலும் தான் எண்ணிய வண்ணமே குறிகளை ஏற்படுத்துவாள். எனவே, அவள் உனக்கு என்ன உறவு கொண்டவள்? இவனை நான் அடிப்பதற்கு ஒரு கொம்பைத் தருவாய்” என்றாள்.

அதற்கு அஞ்சி அவன் அழுதான். அதைக் கண்ட தலைவி, “இனி அழுகையை விடு” என்றாள். நின் தந்தையின்